முகவை பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் அங்கையர் கண்ணன் தயாரித்து, நடித்தும் வெளிவந்திருக்கும் படம் கிளாஸ்மேட்ஸ் 🍻

இயக்கம் – குட்டிப்புலி சரவண சக்தி
இசை – ப்ரித்வி .

நாயகன் அங்கையர் கண்ணன்,
தன் மாமாவுடன் சேர்ந்து சதா நாள் முழுவதும் குடித்து கொண்டே திரிகிறார்கள்.. ஒருநாள்
குடி போதை யில் நிதானம் இழந்து, தன் அண்பான மனைவி மீது சந்தேகப்பட்டு அவரது மண்டையை உடைத்து ஆஸ்பத்திரியில் படுக்க வைக்கிறார் நாயகன் அங்கையர் கண்ணன்…குட்டிப்புலி சரவண சக்தி க்கோ பீரோ வை திறந்து ஒண்ணுக்கு போகும் அளவுக்கு போதை. இந்த குடி பழக்கம் இவர்களோடு மட்டுமில்லாமல் அவர்களது மாமா மயில் சாமி வீடு வரை செல்கிறது… மயில்சாமி மகளோ கலெக்டர் ஆக வேண்டும் என்று படித்து வரும் நிலையில், ..குடி அவரது வாழ்க்கையிலும் விளையாடுகிறது.. ஒழுங்காக இருக்கும் மயில்
சாமியையும் குடிக்க வைத்து, குடி போதை யில் நாயகன் அங்கயற் கண்ணன், வண்டி ஓட்ட, அது விபத்துக் குள்ளாகி .. இவர்களின் வாழ்க்கையை திருப்பி போடுகிறது. இறுதியாக மனம் திருந்தி இவர்கள் குடி யை விட்டு குடித்தனத்தை காப்பாற்றுகிறார்களா? இல்லயா? என்பதே கிளாஸ் மேட்ஸ்.

நாயகன் அங்கையர்கண்ணன் கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப அளவாக நடிச்சிருக்காரு

ஒரு கட்டத்தில்
தன் மனைவிக்கு இல்லற சுகத்தை குடுக்க முடியாமல், தன் இயலாமையை குறித்து குற்ற உணர்ச்சி யுடன் சிந்திக்கும் இடத்தில் மட்டுமே இவரின் (சரவண சக்தி)நடிப்பு அருமை….

மயில்சாமி தான் நடித்தவற்றில் கடைசியாக டப்பிங் பேசிய படமாம்…மனுஷன் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம்.

கணவர் எவ்வளவுதான் குடித்துவிட்டு கூத்தடித்தாலும், ஒண்ணுக்கு போய் கட்டிலையே நாரடிச்சாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், அடுத்த நாள் செலவுக்கு பணம் வைக்கும், அன்பான மனைவிகள் சினிமாவில் மட்டுமே சாத்தியம்……

கணவன் மண்டைய உடைத்தாலும் அதீத அன்புடன் மாமா மாமா’ என கொஞ்சும் நாயகி பிரணா ஹோம்லி லுக்கில் அழகாகத் தெரிகிறார்

அருண் குமார் செல்வராஜ் ஒளிப்பதிவில் முன்பாதியைக் கலகலப்பாகவும் பின் பாதியை நெகிழ்ச்சியாகவும் வைத்துக் கதை சொல்லி இருக்காரு இயக்குனர் சரவண சக்தி

சொல்ல வந்த கருத்து வரவேற்புக்குரியதாக இருந்தாலும் கிளாஸ் மேட்ஸ்…hangover….2.5/5…