
ஷெரிஃப் இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜீவா சுப்பிரமணியன், விலங்கு கிச்சா ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “ரணம் அறம் தவறேல்”.
இசை – அர்ரோல் குரோலி
கிரைம் த்ரில்லர் படமாக வந்திருக்கும் இப்படத்தின் கதை – சென்னையில் ஒரு அட்டை பெட்டியில் கை, கால்,உடம்பு என தனித்தனியாக எரிக்கப்பட்ட நிலையில் கொலை நிகழ, அதனை கண்டு பிடிக்க போலீஸ் அதிகாரிகள் கிளம்புகின்றனர்… காவல் நிலையத்தில் குற்றச் சம்பவங்களை எழுதுபவரும், குற்றவாளிகளின் உருவங்களை ஸ்கெட்ச் செய்து அடையாளம் காட்டுப வருமான வைபவ், விசாரணைக்கு செல்லும் போலீசுக்கு உதவ அவரும் ஒரு நாள் காணாமல் போகிறார்… இந்நிலையில்… கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் வெவ்வேறு நபர்களுடையது என தெரிய வரவே, இவ்வழக்கு தான்யா ஹோப் கைக்கு செல்லுகிறது… வைபவ் மற்றும் தான்யா இருவரும் இணைந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை நெருங்க, நெருங்க, அதிர்ச்சியான சம்பவங்களுடன் இவ் வழக்குதிசை மாறுகிறது… இதனால் குழப்பமடையும் தான்யா விற்கு, வைபவ் உதவ, இருவரும் சேர்ந்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா? இல்லையா ?? என்பதே ” ரணம் அறம் தவறேல்.

வைபவ் ன் 25 வது படமாக வந்திருக்கும் இப்படத்தில், இதுவரை இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.. காதல் காட்சிகள் குறைவாக இருந்த போதிலும், அதிலும் சீரியஸ் ஆக தெரிகிறார்..
சரஸ்வதி மேனன் மற்றும் நந்திதா ஸ்வேதா கொடுத்த கதாபாத்திரத்திற்கு எற்ப கச்சிதமாக நடிச்சிற்காங்க..
தான்யா ஹோப் சீரியஸ் போலீஸ் அதிகாரியாக மிடு க்குடன் தெரிகிறார்…
அர்ரோல் குரோலி யின் இசை யோடு
பாலாஜி கே ராஜா வின் ஒளிப்பதிவு இப்படத்திற்கு பலம் சேர்க்க, முதல் பாதியில் இருந்த வேகம், இரண்டாம் பாதியில் இருந்திருந்தால் ரணம் அறம் தவறேல் – தவறாமல் கல்லா கட்டியிருக்கும்…
மொத்தத்தில் கிரைம் த்ரில்லர் கதையை விரும்பும் ரசிகர்கள் இதை விரும்பி பார்க்கலாம்.