
விக்ரம் ஸ்ரீதரன் மற்றும் ஸ்ரீராம் சிவராமன் எழுதி விக்ரம் ஸ்ரீதரன் இயக்கியிருக்கும் படம் பெ ர்த் மார்க்..
இப்படத்தில்
ஷபீர் கல்லாரக்கல்
மிர்னா மற்றும் பொற்கொடி செந்தில், தீப்தி, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ளனர்.
1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் இருந்து வீடு திரும்பிய
டேனியல் கர்பமாக இருக்கும் தன் மனைவி மிர்னா வை இயற்கை முறை பிரசவத்திற்காக ஒரு மலை க்கு கூட்டி செல்கிறார்…கிளம்பும் போதே பாட்டீல் பாட்டிலாக மதுவும் சிகிரெட் ம் கொண்டு செல்ல, மணைவி இயற்கை முறையில் பிரசவிக்கும் தருவாயில் இதெல்லாம் கூடாது என்று அங்கே வேலை பார்க்கும் ஒருவரால் தடுக்கப்பட்டு, மது சிகிரேட் ஐ விட்டு விட்டு அவர்கள் குடுக்கும் ரூமில் கணவன் மனைவி இருவரும் தங்கி சிகிச்சை முறையை மேற்கொள்கிறார்கள்…இடையிடையில் அவருக்கு இது நம் குழந்தை தானா? என்ற சந்தேகம் வேறு எழுகிறது. சந்தேக பேய் அவரை கொல்ல…தன் மனைவி யின் குழந்தை பிறப்பில் உடன்பாடு இல்லாமல்…அதனை அழிக்க முயலுகிறார். இவரது எண்ணம் நிறைவேறியதா ??மிர்னாவிற்கு குழந்தை பிறந்ததா? அது யாருடைய குழந்தை என்பதே பர்த் மார்க் படத்தின் கதை.
மிலிடிரி யில் இருந்து திரும்பி வந்தவர் என்பதற்கு ஏற்ப கட்டுமஸ்தான உடற் கட்டுடன் இருக்கும் சபீர், போரில் ஏற்பட்ட மனகசப்பால், வெறுப்பை காண்பிக்கும் இடத்திலும் சரி, குழந்தை வேண்டாம் ஆனால் மனைவி மட்டும் வே னும் என்று தடுமாறும் இடத்திலும் சரி, தனது மிதமான நடிப்பை அற்புதமாக வெளி படுத்தியிருக்காரு…
9 மாதம் கரு வை சுமக்கும் நிஜமான கர்ப்பிணி போல நடப்பதற்கும், உட்காருவதற்கும் எவ்வளவு சிரமப்படுவார்களோ அது போல், தனது நடிப்பால் அத்தனை துல்லியமாக நடித்துள்ளார் மிர்ணா…
அமுலு வாக தீப்தி, ஆஷா வாக நடித்துள்ள பொற் கொடி மற்றும் செபஸ்டின் ஆகியோர் குடுத்த கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்துள்ளனர்…
விஷால் சந்திரசேகரன் இசை மற்றும்
உதய் தங்கவேலுவின் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகு தெரிகிறது
மொத்தத்தில் பெர்த் மார்க் – பெண்களுக்கு தரும் இயற்கை முறை பிரசவத்திற்கு கிடைக்கும் நம்பிக்கை..3/5..