வித்யாதர் ககிதா இயக்கத்தில் விஷ்வக் சென் மற்றும் சாந்தினி சௌத்ரி, அபிநயா ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் தெலுங்கு படம் ” காமி”..

விசித்திரமான சாபத்தால் பாதிக்கப்பட்ட ஒரு அகோரியான ஷங்கர்(விஷ்வக் சென்) அதிலிருந்து மீள 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே துரோணகிரி மலை உச்சியில் பூக்கும் ‘மாலிபத்ரா’ என்ற மாய, ஒளிமயமான காளானைத் தேடுகிறார். இதே போன்ற காளானை தேடும் ஜானவி (சாந்தினி சௌத்ரி) குறுக்கே வர இருவரும் சேர்ந்து அந்த காளானை தேடுகிறார்கள்…இதற்கிடையில் ஒரு கிராமத்தில் தேவதாசி முறக்கு தள்ளப்பட்ட துர்கா(அபிநயா) தன் மகளுக்கும் இந்த அநியாயம் நடக்க கூடாது என்று போராடும் கிளைக்கதை, மற்றொன்று ஒரு மருத்துவ குழு ஒரு சிறுவனின் மூளையின் செயற் திறனை மாற்ற செய்யும் அறுவை சிகிச்சை போன்ற சிறு கதைகளை கடைசியில் ஒன்றாக்கி…அந்த காளானை
கண்டுபிடித்தார்களா?? என்பதே “காமி”.

அபிநயா, ஹரிகா பெத்தா, தயானந்த் ரெட்டி, முகமது சமத், சாந்தி ராவ் மற்றும் மயங்க் பராக் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும், படத்தின் உணர்ச்சிகரமான கதையை மேம்படுத்தும் சக்திவாய்ந்த நடிப்பை வழங்குகிறார்கள்

விஸ்வநாத் ரெட்டியின் ஒளிப்பதிவில்
விஷ்வக் சென்னின் அரிய மருந்துக்கான தேடல், இமாலயவின் பணி மூட்டம் பணி பாறைகள் என்று அனைத்தும் இமயமலையின் சிறப்பை அழகாக படம் பிடித்துள்ளது..

இசையமைப்பாளர் ஸ்வீகர் அகஸ்தியின் பாடல்கள் படத்திற்கு பலம் ஊட்ட,
இசையமைப்பாளர் நரேஷ் குமரனின் பின்னணி இசை, goosebumps…

மக்களுக்கு லோபோடமி ஏன் செய்யப்படுகிறது என்பதற்கான தெளிவான பதில் எதுவுமில்லை …இமயமலையில் சிங்கமா? என்பது போன்ற லாஜிக்குகளை யோசிக்காமல் பார்த்தோமானால், காமி செம்மையான அடவெஞ்சர் த்ரில்லர் படமாக வந்திருக்கு…3/5..