KJB டாக்கீஸ் மற்றும் 7 வாரியர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க
இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கி, கலையரசன்,சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, கெளரி கிஷன், ஜனனி ஐயர், திட்டம் இரண்டு ஹீரோ சுபாஷ் செல்வம், சோபியா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க, கதை திரைக்கதை எழுதி, இயக்கி தானும் நடித்திருக்கிறார் விக்னேஷ் கார்த்திக்…

படத்தின் தயாரிப்பாளரிடம் இயக்குனர் வாய்ப்பு கேட்டு கதை சொல்ல போகும், இயக்குனர் விக்னேஷ், நான்கு கதைகளை அந்தலாஜி போல் சொல்ல, ஆரம்பிக்கிறது கதை…

ஆதித்ய பாஸ்கர், கெளரி இருவரும் காதலித்து, திருமணம் செய்ய போக,…கெளரி ஆதித்யாவிற்கு தாலி கட்ட, ஆதித்யா மருமகனாய் கெளரி வீட்டுக்கு செல்ல, மாமனார் கொடுமையால் அவஸ்தை படுகிறார்,
காலம் மாறிய நிலையில் பெண் ஆணுக்கு தாலி கட்டப் போய், என்னென்ன நிகழ்வெல்லாம் நடக்கிறது என்பதனை காட்சி படுத்த, கௌரியிடம் அடி வாங்கும் ஆதித்யா விழித்தெழ,

இதெல்லாம் நடைமுறைக்கு ஆதித்யா கொண்டு வர… சாத்தியமா ?? என நமக்கு கேட்க தோன்றும் கேள்வி…

இயக்குனராலேயே முடிவு சொல்ல முடியாத இரண்டாவது கதை…

மூன்றாவது … ஆண் விபசாரம் பற்றி…

தேரும் நிலையில் உள்ள நான்காவது கதை… குழந்தை தொழிலாளர்களை பற்றி..

இக்கதைகள் அனைத்தையும் சொல்லி, இயக்குனர் ஆகும் வாய்ப்பு விக்னேஷ் க்கு கிடைத்ததா?? இல்லையா ? என்பதே ஹாட் ஸ்பாட்…

பரபரப்பைக் கிளப்பிய படம். காரணம் வேறொன்றுமில்லை –
வரைமுறை க்கு அப்பாற்பட்ட பாலியல் விஷயங்களை பட்டவர்த்தனமாக சொல்லி வணிகமயமாக்கும் புது யுக்தியை கடை பிடித்திருக்கிறார்கள்..

கதைக்கு ஏற்ப, குடுத்த கதாபாத்திரத்தை அனைவரும் சிறப்பாக நடிக்க, கலையரசன் மிக சிறப்பாக நடிச்சிருக்காரு…

குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைப்பது சட்டப்படி குற்றம் எனில், டிவி ஷோக்களில் குழந்தைகளை வைத்து அந்தப்பாடு படுத்துவது எதில் சேர்த்தி என்கிற வினாவை கலையரசன் மூலமாக முன் வைத்த தற்காகவே இயக்குனரை
உண்மையிலேயே பாராட்ட வேண்டும்…

இசையமைப்பாளர் சதிஷ் ரகுநாதன் படத்தின் தன்மையை புரிந்து வித்யாசமான இரண்டு பாடல்களை அளித்துள்ளார்.. பின்னணி இசையும் பாராட்டும்படி இருக்கிறது. கோகுல் பினாய் ஒளிப்பதிவும் முத்தையன் எடிட்டிங் ம் படத்துக்கு கை கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் ஹாட் ஸ்பாட் – ஹாட்…