மீரா மஹதி இயக்கி தீரஜ், ஸ்ம்ருதி வெங்கட், மன்சூர் அலிகான் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் டபுள் டக்கர்..

சிறுவயதில் தாய் தந்தை என இருவரையும் கார் விபத்தில் இழந்ததோடு, முகத்தில் ஏற்பட்ட தீக்காயத்தின் தழும்பால் தாழ்வு மனப்பான்மையில் தவிக்கிறார் அரவிந்த் (தீரஜ்). அரவிந்தின் காதலை முதலில் மறுத்த பாரு (ஸ்மிருதி வெங்கட்), அதை தாங்கி கொள்ள முடியாத தீரஜ், தற்கொலைக்கு முயற்சிக்க, பிறகு காதலை உணர்ந்த பாரு, அவரின் காதலை தெரிவிக்க வீட்டிற்கு வருகிறார். அதேநேரம், ‘காட்’ஸ் ஆர்மி’ என்கிற கடவுளின் உலகத்திலிருந்து வரும் ரைட் (முனீஷ்காந்த்தின் குரல்), லெஃப்ட் (காளி வெங்கட்டின் குரல்) என்ற தேவதை பொம்மைகள் இரண்டும் சேர்ந்து, அரவிந்த்தின் வாழ்நாள் முடிந்துவிட்டதாகத் தவறுதலாக நினைத்து, அவரின் உயிரை எடுத்துவிடுகின்றன. எதிர்பாராதவிதமாக அரவிந்த்தின் சடலமும் காணாமல் போகிறது.

தற்காலிகமாக, அரவிந்த்தின் உயிரானது, அவரைப் போலவே, அதேநேரம் முகத்தில் தழும்பற்று இருக்கும் ராஜா (தீரஜ்) என்பவரின் உடலுக்குச் செல்கிறது. ராஜாவிற்குள் இருக்கும் அரவிந்த், லெஃப்ட், ரைட் ஆகியோர் சேர்ந்து, தொலைந்த சடலத்தைத் தேட, பல பூகம்பங்கள் வெடிக்கின்றன. இதற்கிடையில் பாரு வின் பெரியப்பா இவர்களின் காதலுக்கு இடடையூறு செய்ய இறுதியில், அரவிந்த் தன் உடலைக் கண்டடைந்தாரா, ?அரவிந்த்தும் பாருவும் ஒன்று சேர்ந்தார்களா ?? போன்ற கேள்விகளுக்கான பதிலே ‘டபுள் டக்கர்’
படத்தின் இடை இடையே கிளை கதைகள் வேறு…

ரெட்டை வேடங்களில் நாயகன் தீரஜ்…காமெடி காட்சிகளில் கலக்குகிறார்..

ஸ்மிருதி வெங்கட் குடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செஞ்சுறுக்காங்க.

கோவை சரளா, மன்சூர் அலிகான், யாஷிகா ஆனந்த, கருணாகரன், முநிஷ்காந்த் காளி வெங்கட் இப்படி பல பேர் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்காங்க..

முனீஷ்காந்த் மற்றும் காளி வெங்கட்டின் குரல்கள் படத்திற்குப் பெரிய பலம்
வித்யா சாகர் பின்னனி இசை படத்திற்கு மேலும் பலம் சேர்க்க, டபுள் டக்கர் பேண்டசி கதை யை விருபுவர்கள் பார்க்கும் படம்.