ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்க
ஜி. வி. பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளிவந்திருக்கும் படம் “டியர் (DeAr)”

இவர்களுடன் ரோகினி, காளி வெங்கட், தலை வாசல் விஜய், இளவரசு,கீதா கைலாசம், ஆகியோர் நடிசிருக்காங்க…

அம்மா, அண்ணன், அண்ணி என கூட்டு குடும்பத்தில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் கும் குன்னூரில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். தனக்கு குறட்டை விடும் பழக்கம் இருப்பதை, அம்மாவின் அறிவுறுத்தலின் பேரில் ஐஸ்வர்யா மறைத்து விட, ஜி.வி.பிரகாஷூக்கு சின்னதாக சத்தம் கேட்டாலே தூக்கத்தில் இருந்து எழுந்து விடும் ஜி.வி க்கு முதல் இரவின் அன்று ஐஸ்வர்யா விடும் குறட்டை ஜி.வி ககு பேரதிர்ச்சி யை தர, நாட்கள் செல்ல செல்ல குறட்டை பிரச்சனை ஜி.வி.பிரகாஷூக்கு வேலை போகும் நிலைக்கு தள்ளுகிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷிடம் விவாகரத்து கேட்கிறார். ஜி.வி.முதலில் இதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் மறுக்க, நீதிமன்றம் சில காலம் அவகாசம் கொடுக்கிறது. இதில் குறட்டை பிரச்சினை தீர்ந்து தம்பதியினர் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே டியர் படத்தின் கதையாகும். 

ஜி.வி.பிரகாஷ்குமார் வழக்கம் போல எல்லா படங்களிலும் வருவது போல் நன்றாக நடித்திருக்கிறார் .. ஐஷ்வர்யா கதைக்கு ஏற்ப, நடித்திருக்கிறார்..

காளிவெங்கட் – நந்தினி கேரக்டர் ரசிக்க வைக்கிறது..

குறட்டையை மையமாக வைத்து ஏற்கனவே படம் வந்திருந்தாலும், கொஞ்சம் வித்தியாசமாக, மாமனார் மாமியார் கதை யோடு கொஞ்சம் சென்டிமென்ட் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன்.