விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து மிர்னாலினி ரவி, ஷாரா, விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் ரோமியோ…

மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் விஜய் ஆண்டனி யை திருமணம் செய்து கொள்ள அவரது அம்மாவும் அப்பாவும் கோரிக்கை வைக்க, தனக்கு தானாக ஒரு பெண்ணின் மேல் காதல் வந்தால் தான் செய்து கொள்வேன் என்று சொல்ல, சாவு வீட்டிற்கு பெற்றொரோடு செல்லும் விஜய் ஆண்டனி க்கு, அங்கு இருக்கும் மிர்னாலினி மேல் காதல் வர, அவருடைய பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள் முடிவு செய்கிறார்கள்.

சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மிர்னாலினி க்கோ இந்த திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல், அப்பாவின் தொல்லையில் இருந்து விடுபட திருமணமே மேல் என்று நண்பர்கள் சொல்ல திருமணத்திற்கு சம்மதிக்கிறார்….
இதன்பின் தனது மனைவிக்கு தன் மேல் காதல் இல்லை, இந்த கல்யாணமே விருப்பம் இல்லாமல் செய்தது என விஜய் ஆண்டனிக்கு தெரியவர, அதிரும் அவர் தன் மனைவிக்கு தன் மேல் காதல் வர யோகி பாபு வுடன் சேர்ந்து என்ன செய்கிறார்? கடைசியில் இவர்கள் இருவரும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை.

கதாநாயகன் விஜய் ஆண்டனி கனமான பாத்திரத்தில் சிறந்த நடிப்பை கொடுத்திருக்காரு…மனைவியின் அன்புக்காக ஏங்கும் இடத்திலும் சரி, தங்கை யின் பாசத் தேடலி லும் சரி தன்னுடைய யதார்த்தமான நடிப்பை குடுதிருக்காரு..

மிர்னாலினி…கதையின் பலம்… சாரா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் அவரவர் பங்குகளை சரியாக செய்ய,

காதல் மனைவியின் அன்பை பெற, கணவன் படும்பா பாட்டை கதை களமாக கொண்டு குடும்பங்கள் கொண்டாடும் படமாக அழகாக எடுத்துள்ளார் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன். .