
ர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை “காமராஜ்” என்ற பெயரில் திரைபடமாகத் தயாரித்து வெளியிட அது, தமிழ்நாடு அரசின் சிறப்பு விருதினைப் பெற்றது…அதனை தொடர்ந்து தற்போது ஆக சிறந்த அரநூலான திருக்குறளை படமாக இயக்கவிருக்கிறார் இயக்குனர்
A.J.பாலகிருஷ்ணன்..
சிந்தை சிதறும் மனிதனை
சீர்படுத்தும் இரு வரிகள் அடங்கிய
வாழ்வியல் நூல் இது
அகவாழ்வையும்
புறவாழ்வையும்
அலசும் நூல்
திருக்குறள். ஆனால் திருக்குறளின் உள்ளார்ந்த ஒளியை, அதன் உயிர்ப்பை மூன்று மணி நேர திரைப்படத்திற்குள் அடக்குவது அத்தனை எளிதல்ல என்பது திரைக்கதை எழுதும்போது உணர முடிந்தது. என்றும்
திருவள்ளுவரோடு இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழ் நாட்டினையும் இத்திரைப்படத்தில் பதிவு செய்ய உள்ளோம். மூவரசோடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, வள்ளுவநாடு என பல்வேறு சிற்றரசுகள் குறித்தும், தமிழ் அறிஞர்களுக்கிடையே நிகழ்ந்த வீரம் செறிந்த போர்க் களக்காட்சிகளும் இதில் உண்டு என்றும்
சங்க கால ஐந்து நில மாந்தர்களும் இத்திரைப்படத்தில் பாத்திரங்களாக இடம் பெறுகின்றனர்.
‘காமராஜ்’, முதல்வர் மகாத்மா, திரைப்படங்களைத் தயாரித்த எங்களுக்கு இப்பணி கிட்டியிருப்பது முன் வினைப்பயனே!
திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் இத்திரைப்படத்தினை சப்-டைட்டிலோடு உலகெங்கும் திரையிடத் திட்டமிட்டுள்ளோம்.
காமராஜ் திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனமெழுதிய செம்பூர்.கே.ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுத A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
நடிகர்கள் : வள்ளுவராக- கலைச்சோழன் ( கூத்துப்பட்டறை )
வாசுகியாக – தனலட்சுமி
நக்கீரனாக – சுப்ரமணிய சிவா
பாண்டிய மன்னானாக – ஓ.ஏ. கே. சுந்தர்.
குமணனாக – அரவிந்த் ஆண்டவர்
பெரும்சாத்தனாக – கொட்டாச்சி
இளங்குமணனாக – சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.