தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “வல்லவன் வகுத்ததடா”.

ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத 6 நபர்களின் வாழ்க்கை யிலும் பணம் இவர்களுக்கிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறது…அதனால் அவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதே கதை..

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் ஒரு விதமான மேனரிசத்தோடு தனியாக தெரிய, மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் குடுத்த வேலையை சரியாக செஞ்சிருக்காங்க..

கதை எழுதி இயக்கியிருப்பதோடு தயாரிக்கவும் செய்திருக்கும்  விநாயக் துரை,

தானம் என்பது ஏதேனும் பலன் வேண்டிச் செய்வது. தர்மம் என்பது எந்தவித எதிர்பார்ப்புமின்றி இல்லாதோருக்கு உதவி செய்வது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது சுயநலமின்றி செய்யும் உதவி நமக்கு புண்ணியத்தைச் சேர்க்கும். ‘

பிரமாண்டமான முறையில் சொல்லக்கூடிய திரைக்கதையாக இருந்தாலும், அதை சிறு பட்ஜெட்டில் எடுத்து மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார்

நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்” என்ற வாக்கியத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் விநாயக் துரை, அமைத்திருக்கும் சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் அதை ஹைபர் லிங்க் முறையில் கொடுத்த விதம் ரசிகர்களை கண்டிப்பாக ஏமற்றாது ..3/5..