
தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக மீண்டும் விஷாலை வைத்து ஹரி இயக்ககத்தில் வெளி வந்திருக்கும் படம் ரத்னம்…
இப் படத்தில் விஷாலுடன், பிரியா பவானி சங்கர், முரளி ஷர்மா, சமுத்திரகனி, கெளதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆந்திரா-தமிழ்நாடு பார்டரில் மிகப்பெரும் கொள்ளையுடன் படம் தொடங்குகிறது, அங்கிருந்து ஆரம்பிக்கும் இயக்குனர் ஹரி யின் வேகம் இறுதி காட்சி வரை தொடருகிறது…
வேலூரில் இருக்கும் எம் எல் ஏ சமுத்திரக்கனி அடியாளாக வரும் விஷால் போலிஸ் தட்டி கேட்க வேண்டிய அத்தனை அநியாயங்களை யும் தனி ஒருவனாக நின்று தட்டி கேட்கிறார்.
ஒரு நாள் வேலூரில் ப்ரியா பவானி ஷங்கரை நீட் எக்ஸாம் எழுத வருகையில் அவரை பார்க்க, அந்த இடத்தில் ப்ரியா பவானி ஷங்கரை ஒரு ஆந்திரா கூலிப்படை கும்பல் கொல்ல முயல, அவரை காப்பாற்றி அவருக்கு அரணாக நிற்கிறார் ..,
ப்ரியா பவானி ஷங்கர் -ன் சொந்த நிலத்தினை கையாள முயலும் ஆந்திராவின் ராயுடு பிரதர்ஸ் தான் இத்தனைக்கும் காரணம் என்று தெரிய வருகிறது…. இந்த பிரச்சினையை சொந்த பிரச்சனை யாக நினைத்து கையாளும் விஷால் நிலத்தை மீட்டு ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே மீதிக்கதை.
இடைவேளை சேஸிங் காட்சி பரபரப்பையும், டெக்னிக்கலாக சூப்பராகவும் இருந்தது…
விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத கூட்டணியில் புரட்சி தளபதி விஷாலும் சேர, எதிரிகளை பந்தாடி தொ ம்சம் செய்கின்றனர்…இவர்களுக்கு இணையாக சுகுமாரின் கேமரா வும் சுழல…. டி. எஸ். பி இசையில் ரத்னம்..ரணகளம்…