அருண் கே பிரசாத் இயக்கி எம்.எஸ்.பாஸ்கர் முதன்மை வேடத்தில் நடிக்க, இவருடன் கபாலி விஸ்வந்த், வெண்பா, பிரியதர்ஷினி மற்றும் நமோ நாராயணன் ஆகியோர் நடிப்பில் வெளி வர இருக்கும் படம் அக்கரன்…

ஆரம்ப காட்சியிலேயே இரண்டு பேரை நாற்காலியில் கட்டி வைக்க, சாரி புது டெக்னிக்காக பசையைக் கொண்டு ஒட்டி வைத்து வன்முறையை கையாண்டு உண்மைகளை வரவழைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.
அங்கிருந்து கதை ஃப்ளாஷ்பாக்கில் ஆரம்பிக்க, எம்.எஸ்.பாஸ்கர்
தன் இரண்டு மகள்களுடன் வசித்து வர, மூத்த மகளுக்கு பெண் பார்க்கும் படலம் நடக்க, மூத்த மகளான வெண்பா வோ, அதற்கு ஒத்து கொள்ளாமல் ஏற்கனவே தனக்கும் கபாலி விஸ்வந்துக்கும் திருமணப் பேச்சு வார்த்தை நடந்து முடிந்திருக்க, அதனை காரணம் காட்டி அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருக்கிறார்.. ஏதோ ஒரு காரணத்திற்காக சிறை சென்ற விஸ்வந்த் ஐ அறவே வெறுக்கிறார் எம். எஸ்.பாஸ்கர்…

இந்நிலையில் இளைய மகள் பிரியதர்ஷினி மருத்துவம்  படிக்க, அதற்கான கோச்சிங் கிளாஸ் சென்ற நிலையில் காணாமல் போகிறார்.  செல்வாக்கு மிக்க அரசியல்வாதியான நமோ நாராயணனுக்கு சொந்தமான அந்த கோச்சிங் சென்டரில் சென்று விசாரிக்கையில், சரியான பதில் ஏதும்கிடைக்காமல் போக, வெண்பா வும், எம்.எஸ்.பாஸ் கரும் செல்ல, அவர்களுக்கு உதவும் வகையில் விஸ்வந்த் ஒரு வழக்கறிஞருடன் வந்து காவல் நிலையத்தில் புகார் செய்கிறார்…

தன் சின்ன மகளை பற்றி எந்த விதமான துப்பும் கிடைக்காத நிலையில், எம்.எஸ்.பாஸ்கர், படத்தின் ஆரம்ப காட்சியில் கடத்தி பசை போட்டு ஒட்டி வைத்திருக்கும் அந்த இருவரிடமும் விசாரிக்க, வலிக்கு பயந்து இருவரும் வெவ்வேறு விதமாக நடந்த காட்சிகளை சொல்ல, இதில் யார் சொல்வது உண்மை என்று தெரிய வருவதே மீதி கதை,…

இரண்டு பெண்களைப் பெற்ற தந்தையாக எம்.எஸ் பாஸ்கர், தள்ளாடும் நடையுடன் தவிக்கும் பாசமிகு தந்தையாகவும், வில்லன்களைப் பிடித்து ஒட விட்டு உதைக்கும் அதிரடி ஆக்சன் ஹீரோவாக நடிக்க, எப்படி என்று நம்மளை கேள்வி கேக்க விடாமல் இறுதியில் டுவிஸ்ட் வைத்து பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்… 

வெண்பா வும் பிரிய தர்ஷினி யும், குடுத்த வேலையை சிறப்பாக செய்துருக்காங்க…

படத்தின் நடு நடுவில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும் அக்கரன் – அசுரனை வதம் செய்யும் கடவுள்….