

இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் “ஸ்டார்”..
யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கவினுடன் அதிதி போங்ஹர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் என பலரும் இப்படத்தில் நடிச்சிருக்காங்க..
சிறு வயது முதலே நடிப்பின் மீது தீராக்காதல் கொண்ட சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கவின்,மகனின் ஆசையை எப்பேற்பட்டாவது, நிறைவேற்ற துடிக்கும் தந்தையாக கவினுக்கு பக்கபலமாக நிற்கும் லால்…
பல இன்னல்களுக்கு பிறகு கவின் “ஸ்டார்” ஆக ஆகிறார்..
சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருக்கும் கவின் ஒரு கட்டத்தில் நடிப்பு பயிற்சி பெற மும்பைக்கு செல்கிறார்.
அங்குள்ள பிரபலமான நடிப்பு பட்டறையில் சேர வேண்டும் என நினைக்கும் கவினுக்கு முதலில் வாய்ப்பு கிடைக்காமல் நிராகரிக்க படுகிறார்…கொண்டு சென்ற பணத்தையும் பறி கொடுக்கும் கவின், மும்பையில் கஷ்டப்பட்டாலும் தொடர்ந்து முயற்சி செய்து இறுதியில் பயிற்சி பட்டறையில் இணைகிறார்.
நடிப்பில் சாதிக்க ஹைதராபாத்தில் வாய்ப்பு கிடைத்து, அங்கு செல்லும் வழியில் நேரிடும் விபத்து, அவன் வாழ்வை எப்படி திருப்பி போடுகிறது? அந்த விபத்தில் இருந்து மீண்டு சினிமாவில் நடிகனாக, ஸ்டாராக வெளி வருகிறாரா? என்பதே படத்தின் கதை.
கவினின் தந்தையாக நடித்துள்ள லால் மற்றும் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம் எதார்த்தமான தம்பதியினர் ஆக நடிப்பின் மூலம் மனதை தொடுகிறார்கள். மகனுக்கு தந்தையாக மட்டும் இல்லாமல் தோளோடு தோள் நிற்கும் நண்பனாக லால் நடித்திருப்பது படத்திற்கு மிகப் பெரிய பலம்..
படத்தின் மற்றொரு ஹீரோ யுவன் ஷங்கர் ராஜா, பின்னணி இசையிலும், பாடல்களிலும் பட்டையை கிளப்புகிறார்..
குறிப்பாக மும்பையில் வாழ்வாதாரத்திற்-காக கவின் போராடும் போது வரும் பாடல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி யாக திரையரங்கை அதிர வைத்து விட்டது.
மும்பை நகரத்தை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் எழில் அரசு.
மொத்தத்தில் ஸ்டார் – சூப்பர் ஸ்டார்…