
ராடான் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ராதிகா மற்றும் சரத்குமார் தயாரிக்க, கிஷோர், ஸ்ரியா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், தர்ஷா குப்தா, கனி குஸ்ருட்டி, தெலுகு பிக் பாஸ் நிரூப், சந்தான பாரதி, கவிதா பாரதி நடிப்பில் வெளி வந்திருக்கு…
எழுதி இயக்கியிருக்காரு.. ஜி. வசந்தபாலன்.
15 ஆண்டு க்கு முன் வட இந்தியாவில் முகம் காட்டப்படாத ஒரு பெண்ணை அடித்து ரத்தக் களறியாக்கி சித்திரவதை செய்ய , ஒரு நிலையில் அவள் அவர்களை வெட்டி வீழ்த்திவிட்டு தப்பிக்க, அந்த பெண்ணை தேடி கேஸ் ஃபைல் ஆகிறது…
தற்சமயம் முதலமைச்சர் மீது (கிஷோர்) ஓர் ஊழல் குற்றச் சாட்டு விழ, அதை வைத்து அவரை ஜெயிலுக்கு அனுப்பி , தமிழ்நாட்டை வட இந்தியக் கட்சி வசம் ஒப்படைக்க துடிக்கும் கைக்கூலிகள் ஒரு பக்கம்,
முதல்வரை காப்பாற்ற துடிக்கும், அதே சமயம் அப்பாவைப் பின்பற்றி அப்பாவுடன் அரசியலில் இருக்கும் ரம்யா நம்பீசன், சிறுவயது முதலே முதல்வரோடு நட்புடன் இருக்கும் பழம்பெரு அரசியல்வாதி சந்தான பாரதி, மாமாவின் அரசியல் அதிகாரத்தை தனது பேராசையால் தவறான பாதையை நாடும் மருமகன் அதாவது இளைய மகளின் கணவன் ( பிக் பாஸ் நிரூப்), பெண் பத்திரிகையாள ரான கொற்றவை ( ஸ்ரியா ரெட்டி) முதல்வரொடு விவரிக்க முடியா நட்பு. இப்படி முதல்வரை சுற்றி இருக்கும் நபர்கள், அவரின் முதல்வர் நாற்காலி பறிபோக இருக்கும் நிலையில்..அவர் குடும்பத்தில் இருந்தே அடுத்து முதல்வர் நாற்காலியில் யார் அமர்வது என்று திட்டம்பொடும் குள்ளநரி தருணத்தில்,
முதல்வரின் மன நிலை, அவருக்கு தரப்படும் அழுத்தம் அவரை சார்ந்தவர்களின் பரிதவிப்பு, …இப்படி அடுத்து என்ன என்று முதல்வரை சுற்றி யே, வந்திருக்கிறது தலைமை செயலகம்…
பிரம்மிக்க வைக்கும்படி நடித்து இருக்கிறார் கிஷோர் .
ஸ்ரியா ரெட்டியின் கேரக்டரும் காட்சிகளும் அருமை.
சந்தான பாரதி யை வைத்து, இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம்…
தமிழகத்தின் அனைத்து புகழ்பெற்ற சகல திராவிட இயக்க அரசியல் நிகழ்வுகளை தொகு த்ததொடு, மறைந்த முன்னாள் முதல்வர் ஆந்திர ராஜசேகர ரெட்டி இவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை யும் கோர்த்து,
இன்றைய வடக்கத்தி அரசியலின் சாதி மற்றும் மொழி ரீதியான ஆட்கள் அவர்கள் செயல்பாடுகள் இவற்றை வைத்து அப்பப்பா எத்தனை? ….
தற்கால அரசியலை நினைத்து பயத்தோடு எடுத்திருக்கிறார்கள்…
ரவிசங்கரின் ஒளிப்பதிவு மற்றும் . ஜிப்ரனின் இசையும் கதைக்கு பலம்.