
சேத்துமான் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் – உறியடி
விஜய் குமார், திலீபன், பாவெல் நவகீதன் மற்றும் ஜார்ஜ் மரியன், பிரீத்தி அஸ்ராணி, வத்திகுச்சி திலீபன் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “எலக்சன்”.
வேலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் ஐ சேர்ந்த ஜார்ஜ் மரியன் தமிழ்நாடு மக்கள் கட்சியின் தீவிர தொண்டனாக செயல்பட்டு வர, அவர் ஆதரவு அளிக்கும் வேட்பாளரை மட்டுமே வெற்றி பெற வைக்கிறார்கள்அவ்வூர் மக்கள்..
இந்நிலையில்
ஜார்ஜ் மரியனின் நண்பர் சுயேச்சையாக நிற்பதாகவும், தனக்கு ஆதரவு தருமாறும் கேட்க, நண்பராக இருந்தும் அதனை மறுத்து, தன் கூட்டணி கட்சி யின் வேட்பாளருக்கு ஆதரவு தந்து வெற்றிபெற வைக்கிறார் ஜார்ஜ் மரியான்.
அதனால் இவர்கள் இருவருக்கும் பகமை எழவே இவரது மகனான ஹீரோ விஜயகுமார் க்கு
பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சை யாக போட்டியிடும் படி நிர்பந்தம் ஏற்படுகிறது.. அரசியல் கணக்கு தெரியாத, நடராசன் வாழ்க்கையை அரசியல் எப்படி புரட்டிபோடுகிறது, இறுதியில் அவர் எடுத்த முடிவு என்ன என்பதே மீதிக்கதை.
நடராசன் கதாப்பாத்திரத்தில் கணக்கச்சிதமாக நடித்திருக்கும் விஜயகுமார் முதல் காதல் கைவிட்டு போகும் போதும் சரி, தன் மாமா பவெல் நவகீதன் முன் என் வாழ்க்கை இப்படி ஆனதற்கு காரணம் நீதான்யா என்று உடைந்து அழுது பேசும்போதும் சரி, நடிப்பில் மெருகு…
பாவெல் நவகீதன் ஒரு முழுமையான வலுவான பாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார், அயோத்திக்குப் பிறகு, ப்ரீத்தி அஸ்ரானி தான் ஒருமீண்டும் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்…
ஜார்ஜ் மேரியன் தனது மதிப்புமிக்க ‘கட்சித் துண்டு’வை விட்டுவிடும் குறிப்பிட்ட காட்சி- இயக்குனர் தான் சொல்ல வந்ததை சொன்ன விதம் அருமை…
கோவிந்த் வசந்தாவின் இசை மற்றும் பிண்ணனி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்…
மொத்தத்தில் “எலக்சன்” – அரசியல் பாடம்..3/5..