
கோபுரம் ஃபிலிம்ஸ் சுஷ்மிதா அண்புசெழியன் தயாரிப்பில் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா, பால சரவணன், விவேக் பிரசன்னா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “இங்கு நான் தான் கிங்கு”
திருமணமாகாத வெற்றி வேல் (சந்தானம்) நண்பனிடம் 25 லட்ச ரூபாய் கடன் வாங்கி சொந்த வீடு கட்டி கல்யாணத்துக்காக காத்துக்கிடக்கும் முதிர்கண்ணன். தனக்காக பெண் தேட தோதாக மேர்ட்ரிமோனியல் அலுவலகத்திலேயே பணிக்கு சேர்கிறார்… வாங்கிய கடனை அடைக்க 25 லட்சம் வரதட்சணையுடன் ஒரு பெண் கிடைத்தால் போதும் என்ற குறைந்த பட்ச ஆசையோடு தேடும் வேளையில், தரகர் ஒருவர் ஜமீன் குடும்பத்தில் பெண் பார்க்க அழைத்துச் செல்கிறார். அங்கு கிடைக்கும் ராஜ வரவேற்பு, ஜமீன் பங்களா அனைத்தையும் பார்த்து வாய் பிளக்கும் சந்தானத்தை, தன் மகள் தேன்மொழிக்கு (ப்ரியாலயா) கல்யாணம் செய்து வைக்கிறார் பெரிய ஜமீன் விஜயகுமார் (தம்பி ராமையா).
திருமணத்திற்கு பின்பு தான் தம்பி ராமையா விற்கு பத்து கோடி கடன் இருப்பதும், அதற்காகவே ஊர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து அவர் மகளுக்கு மணமுடித்து வைத்து, வீட்டில் மீதம் உள்ள அனைத்தையும் கடன்காரர்களுக்கு பிரித்துக் கொடுக்க, அவர்களும் எடுத்துச் செல்கின்றனர்..
அதன் பின் மனைவியுடன் சேர்த்து மாமனாரையும், மச்சானான சின்ன ஜமீனையும் (பால சரவணன்) பார்த்துக் கொள்ளும் பாரமும் சேர்ந்து கொள்ள,அவர்களை சென்னைக்கு அழைத்து வருகிறார் சந்தானம்..
அதே வேளையில் சென்னையில் பல இடங்களில் வெடிகுண்டு வைக்க தீவிரவாத கும்பலும் சென்னை வர, ஏற்கனவே வாங்கிய கடனை எப்படி கட்டுவது என முழி பிதுங்கும் சந்தானத்திற்கு 50 லட்சம் கிடைக்க ஒரு வாய்ப்பு அமைய, அதை எவ்வாறு எதிர் கொள்கிறார், தீவிரவாத கும்பல் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
சந்தானம் இம்முறை தனது அக்மார்க் காமெடி படத்தை கொடித்திருக்காரு…
தம்பி ராமையா வின் காமெடி வொர்க் அவுட் ஆகியிருக்கு..படம் முழுக்க ஆங்காங்கே வெடிசிரிப்பு…
பிரியாலயா அழகாக வந்து போகிறார்…
விவேக் பிரசன்னா தன் நடிப்பால் மேலும் மெருகு சேர்கிறார்..
சேஷு, மாறன், சுவாமி நாதன், முனிஷ் காந்த் ஆகியோரின் நடிப்பில் சிரிப்புக்கு பஞ்சமில்லை…
இசை – டி இமான்…இருந்தும் பாடல்கள் கொஞ்சம் சுமார் ரகம்..
நோ லாஜிக் ஒன்லி மேஜிக் என்பது போல், கேள்விகள் எதுவும் கேட்காமல் படம் பார்த்தோமானால் இது ஒரு ஜாலியான படம்…மொத்தத்தில் “இங்கு நான் தான் கிங்கு” – காமெடி கிங்கு 3/5..