விடுதலை படத்தின் ஹீரோ வாக அவதாரம் எடுத்திருந்த சூரியின் மறு அவதாரம் இவர் முழு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் கருடன். சூரி என்று வரும் ஒற்றை டைட்டில் கார்டு க்காக அவர் எடுத்து கொண்ட உழைப்பு….

துரை செந்தில்குமார் இயக்கியிருக்கும்
இப்படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், மைம் கோபி, ஆர்.வி. உதயகுமார், ஷிவதா, ரேவதி பிரியன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இசை – யுவன்

விசுவாசதிற்கும் நியாயதிற்கும் நடுவில் நிற்கும் சொக்கன் (சூரி) இறுதியில் எதை கையில் எடுக்கிறார் என்பதே கருடன்…

தனக்கு சோறு போட்டு வளர்த்த நண்பன் கர்ணா(உன்னி முகுந்தன்) அவருக்கு ஒன்று என்றால் உயிரையே கொடுக்கும் அளவிற்கு, இன்னும் சொல்ல போனால் கர்ணா வின் நண்பன் ஆதி(சசிகுமார்), கர்ணாவை செல்லமாக அடிக்க போக, குறுக்கே கை விட்டு “அண்ணண்” நே என்று நிறுத்தும் அளவிற்கு விசுவாசி சொக்கன்…

இவர்களின் பராமரிப்பில் இருக்கும் கோவில் பட்டயம் மூலம் ஒரு அரசியல்வாதிக்கு பல கோடி கிடைக்கும் வாய்ப்பு வர, அவ்வூரில் இருக்கும் தன் மச்சானிடம் பொறுப்பை ஒப்படைக்க, அவரும் (மைம் கோபி) கர்ணாவிற்கு ஆசை காட்டி, ஆதியை கொல்ல சொல்லும் அளவிற்கு, தூண்டி விட, சொக்கன் யார் பக்கம்? தன்னை சோறு போட்டு வளர்த்த விஸ்வாசத்திற் க்காக கர்ணா வின் பக்கமா ?? இல்லை ஆதி யின் பக்கம் இருக்கும் நியாயத்தின் பக்கமா ?? என்பதே மீதிக்கதை…

சொக்கனா கவே வாழ்ந்திருக்கிறார் சூரி..அறிமுக காட்சி யிலேயே நண்பனின் அரனாய் எப்போதும் இருக்க, அடுத்து மெல்லிய இழை போல் காதலில் கவிழ்ந்து, நண்பனால் ஏமாற்றப்படும் போது அதாங்கபட்டு, நியாயத்திற்காக ஆவேசமாய் எழுவது என்று… வரும் அத்தனை இடங்களிலும் நடிப்பில் உச்சம் தொட்டுள்ளார்..

நண்பனின் துரோகம் என்று எத்தனை படம் எடுத்தாலும் , அதில் gana கச்சிதமாக பொருந்துபவர் சசிகுமார் மட்டுமே….அத்தனை எடுப்பான தோரணை யூடன் கூடிய நடிப்பு…

ஏற்கனவே தமிழில் அறிமுகம் ஆகியிருந்தாலும் உண்ணி முகுந்தனுக்கு இது பேர் சொல்லும் படம்..

நன்றியுள்ள நாயாக இருந்த என்னை, நன்றி கெட்ட மனுஷனாக மாத்திட்டியே ! என் சொல்லி முடிக்கும் இடத்தில் இயக்குனர் செந்தில் குமாரின்…திரைக்கதை யில் நேர்த்தி….

அத்தனைக்கும் முத்தாய்ப்பு.. சூரி யும், யுவனின் பின்னனி இசையும் தான்…

முட்டு சந்தில் முட்டாமல், sk டிராவல்ஸ் ல் ஏறாமல் நேரே போகலாம் சூரி….3.5/5..