குரங்கு பொம்மை இயக்குனர் நிதிலன் சுவிமினாதன் இன் அடுத்த படைப்பு, “மகாராஜா”

விஜய்சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, சச்சினா நெமிதாஸ், சிங்கம் புலி, நட்டி ஆகியோர் நடிச் சிருக்காங்க…

இசை – பி.அஜனீஷ் லோக்நாத்

சென்னை கே.கே.நகர் பகுதியில் சலூன் கடை வைத்திருக்கும் மகாராஜா (விஜய் சேதுபதி) தனது மகள் ஜோதியுடன் (சச்சினா நெமிதாஸ்) பள்ளிக்கரணை பகுதியில் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் காவல் நிலையம் வரும் அவர் மூவர் அடங்கிய திருட்டு கும்பல் ஒன்று தன் வீட்டிலிருந்த ‘லட்சுமி’ யை திருடி கொண்டு போய்விட்டதாகவும், ஸ்போர்ட்ஸ் கேம்ப்பிற்குச் சென்றிருக்கும் தன்னுடைய மகள் ஜோதி திரும்ப வருவதற்குள், அதை கண்டுபிடித்து தருமாறும் காவல்துறை க்கு வேண்டுகோள் விடுக்க, காவல் துறை லட்சுமி யை கண்டுபிடித்து கொடுத்தார்களா ?? மகாராஜாவின் வீட்டில் நடந்தது என்ன, அவருக்கும் வீடு புகுந்து கொள்ளை அடித்திருக்கும் அந்த கும்பலுக்கும் என்ன தொடர்பு என்பதே இந்தப் படத்தின் கதை.

சிரிக்காத இறுக்கமான முகம், மகளுக்காக எதையும் செய்யும் தந்தை, லட்சுமி யை கண்டுபிடித்தே தீர வெண்டும் என காவல் துறைக்கு கொடுக்கும் நெருக்கடி, அழுத்தமான பாடி லங் குவேஜ், என கிடைக்கும் அத்தனை இடங்களிலும் தன் நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார் விஜய் சேதுபதி…

குழந்தை நட்சத்திரமாக சச்சினா நெமிதாஸ் தன் உணர்வுபூர்வமான நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் ஜொலித்திருக்கிறார்.

பாய்ஸ்’ மணிகண்டனுக்கு இரண்டாவது இன்னிங்ஸ், அடுத்தடுத்து படங்கள் புக் ஆகும் வகையில் நடிச்சிருக்காரு…

நட்டி, சிங்கம் புலி, அருள்தாஸ், முனிஸ்காந்த் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்

இடைவேளைக்கு முந்தைய சண்டைக் காட்சியை மிரட்டலாக வடிவமைத்திருக்கிறார். ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு

பி.அஜனீஷ் லோக்நாத் பிண்ணனி இசையும் சேர்ந்து, நம்மை இரண்டு மணி நேரம் இருக்கை யின் நுனியில் கட்டி போடுகிறது…

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன், சில இடங்களில் டார்க் மோட் இல் அழகாக ஒளிப்பதிவினை செய்திருக்கிறார்…

பாலியல் ரீதியான குற்றம், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற சென்சிட்டிவான காட்சிகளில், கொஞ்சம் வன்முறையை குறைத்திருக்கலாம்..

மொத்தத்தில் நிதிலன் கதை மேக்கிங்கில் ராஜா வாக திகழ, அக் கதைக்கு வடிவம் கொடுத்து வாழ்ந்திருக்கிறார் மகாராஜா வாக விஜய்சேதுபதி….