
வேடியப்பன் தயாரிப்பில், பாஸ்கர் சக்தி எழுதி இயக்கியிருக்கும் படம் ” ரயில் “
குங்கும ராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரு ரமேஷ் வைத்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிசிருக்காங்க…
இசை – எஸ். ஜே. ஜனனி
கதாநாயகன் குங்கும ராஜ் மது பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்லாமல் எந்நேரமும் சிகிரெட் பிடித்துக்கொண்டும், அழுக்கு துணியோடு, சதா மது குடிப்பதிலேயே நாட்டம் கொண்டிருக்கிறார். இதனால் அவரது மனைவி வைரமாலாவுக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை நேரிடுகிறது…. திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால், மாமனாரோடு சேர்ந்து, ஊர் காரர்களும் தன்னை மதிப்பதில்லை என விரக்தியில் தன் சகாவோடு மேலும் குடிக்க, யாரிடமும் காட்ட முடியாத கோபத்தை, தன் வீட்டின் எதிரில் குடியிருக்கும் வட மாநில வாலிபர் பர்வேஸ் மெஹ்ரூ வின் மீது காட்டுகிறார். ஆனால், அவரது மனைவி வைரமாலா வோ வட மாநில வாலிபரை தனது சொந்த தம்பியாக நினைத்து பழக, அவரும் தீதி தீதி என்று பாசத்துடன் தன் மனைவி மகள் ஃபோட்டோ வை காண்பித்து மகிழ்கிறார்….இது பிடிக்காத குங்கும ராஜ் கருவி கொண்டே இருக்க, ஒரு நாள்
பர்வேஸ் தனது சொந்த ஊருக்கு போக இருக்கும் சூழலில், வைரமாலாவிடம் ஒரு பையை கொடுக்கிறார். அதை திரும்ப வாங்குவதற்குள் அவர் திடீரென்று மரணமடைய, குடி போதையில் அவனை கொன்று விடுவதாக வுளரிய குங்கும ராஜ் திகைத்து நிற்க.. வட நாட்டுகார தம்பியின் இறுதி சடங்கை வைர மாலாவும் அவரது அப்பாவும் ஏற்கின்றனர், இந்நிலையில் வட நாட்டில் இருந்து, இறந்தவரின் மனைவி, குழந்தை, தந்தை ஆகியோர் தேனி வருகிறார்கள். இறுதிச் சடங்கு முடிந்த பிறகு பர்வேஸ் வைத்திருந்த பணம் பற்றி அவரது குடும்பத்தார் கேட்க, அப்போது தான் வைரமாலாவுகு பர்வேஸ் தன்னிடம் கொடுத்த பை நினைவு வருகிறது. அதை அவர் எடுக்க செல்லும் போது அந்த பை அங்கு இல்லாததால் அதிர்ச்சியடைகிறார். அந்த பை என்ன ஆனது?, பர்வேஸ் குடும்பத்திற்காக வைரமாலா என்ன செய்தார்? குங்கும ராஜ் நிலை என்ன? என்பது தான் படத்தின் மீதிக்கதை
நாயகனாக நடித்திருக்கும் குங்குமராஜ், நாயகியாக நடித்திருக்கும் வைரமாலா இருவரும் மண் சார்ந்த மனிதர்களாக மனதில் நிற்கிறார்கள். அதுவும் வைரமாலா வின் நடை வுடை பாவனை என்று அனைத்தும், இயல்பாக உள்ளது…
மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் சிறப்பான தேர்வு..
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் கேமரா கதை நடக்கும் இடத்துக்கு அதாவது நம்மையும் கிராமத்திற்குள் அழைத்துச் செல்கிறது… .
படத்தின் முத்தாய்ப்பு என சொல்லப்படும் இரு பெண்கள் எஸ்.ஜே.ஜனனியின் இசை மற்றும் வைரமாலா வின் நடிப்பு இரண்டு மட்டுமே…
நம்மூர் மக்கள்
மதுவுக்கு அடிமையாகி, உழைப்பின் மீது நாட்டம் இல்லாமல், சோம்பேறிகளாக திரிய, வட மாநிலத்திலிருந்து வயிற்று பிழைப்பிற்காக இங்கு வந்து வேலையை செய்யும், அவர்கள் மேல் பழியை போட்டு, வஞ்சத்தொடு இழிவாக பேசும் சில இனத்தவர்களுக்கு இப்படம் ஒரு குட்டு
யாதும் ஊரே யாவரும் கேளீர்.. என்று உணர்த்தியிருக்கிrறார் இயக்குனர் பாஸ்கர் சக்தி…