

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகாவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “இந்தியன் 2”.

இப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
இந்தியன் 2 திரைப்படமானது வரும் 12 ஆம் தேதி திரைக்கு வெளி வர வுள்ள நிலையில் இந்திய மண்ணை கடந்தும் பல நாடுகள் சென்று ப்ரொமோஷன் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், துபாயில் வானில் பாராசூட்டில் பறந்தபடி வீரர்கள் இந்தியன் 2 படத்தின் பேனரை வானில் பறக்கவிட்டனர்.
இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.