ப. பாண்டியை அடுத்து தனுஷ் இயக்கியிருக்கும் படம் ராயன்…இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் 50 வது படம்,முதல் படத்தை ஃபீல் குட் படமாக கொடுத்த தனுஷ், அடுத்து இரத்தமும் சதை யும் கொண்ட சகோதர சகோதரி பாசத்தி னை வைத்து, அதகளமான படத்தினை கொடுத்திருக்காரு…

காத்தவராயன் ( தனுஷ்) முத்துவேல் ராயன் ( சந்தீப் கிஷன்) மாணிக்கவேல் ராயன் (காளிதாஸ் ஜெயராம்) ஆகிய மூவரும் சகோதரர்கள். இவர்களின் ஒரே தங்கை துர்கா ( துஷாரா விஜயன்)

ராயன் சிறு வயதான தன் தம்பிகள் மற்றும் பிறந்த குழந்தையான தங்கையுடன் கிராமத்தில் இருந்து தப்பித்து சென்னை வந்து சேருவதில் இருந்து, கதை ஆரம்பம் ஆகிறது…காய்கறி சந்தையில் வேலை செய்யும் சேகரின்(செல்வராகவன்) உதவியை பெற்று, தம்பி தங்கையை வளர்த்து, அவர்களும் பெரிதாக வளர்ந்து நிற்க, நிகழ்காலத்திற்கு வருகிறது கதை.
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் கடைசி தம்பி மாணிக்கம், அடிக்கடி ஏதாவது தகராறு செய்து பிரச்சனை யை இழுத்து வரும் முதல் தம்பி முத்து, திருமணத்திற்காக காத்திருக்கும் தங்கை துர்கா, எப்போதும் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு சைலண்டாக இருக்கும் மூத்த அண்ணண் ராயன் என முதல் பாதி பாச களமாக செல்கிறது. எதிர்பாராமல் நடக்கும் இரு ரவுடிகளான சேது ( எஸ்.ஜே சூர்யா) மற்றும் துரை (சரவணன்) ஆகிய இவர்கள் இருவருக்குமான பழிவாங்கலில், ராயனின் தம்பி முத்து மாட்டிக்கொள்ள அவனை காப்பாற்ற அசுர அவதாரம் எடுக்க, இறுதியில் ராவண அவதாரம் எடுத்து சிலரை வதைக்கிரார்..அவர்கள் யார்? என்பதே மீதக்கதை…

இப்படத்தில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்காங்க… படத்தை இயத்கிய விதத்திற்காக தனுஷை பாராட்டியே ஆக வேண்டும். ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் படத்தின் பெரிய பலம். ஏ.ஆர். ரஹ்மானின் இசை மற்றொரு பலம்.

தனுஷ் அத்தனை கொலைகளை செய்தாலும், அவர் வைத்திருக்கும் சகோதர பாசம் ஒன்றே என சொல்லியிருப்பதால், நம் மனதும் தனுஷ் பக்கம் ஒன்றி போவதை தடுக்க இயலாது… இதுவே இயக்குநராக தனுஷுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி.