கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சுமன் குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் “ரகு தாத்தா”.. கீர்த்தி யுடன் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் ஆகியோர் நடிச்சிரு காங்க…

60 கால கட்டத்தில் வள்ளுவன்பேட்டை எனும் கிராமத்தை சேர்ந்த கயல்விழி(கீர்த்தி சுரேஷ்).வங்கியில் வேலை செய்து வருகிறார்… கயல்விழி மாணவியாக இருந்தபோதே தன் தாத்தா வுடன் சேர்ந்து, இந்தி திணிப்புக்கு எதிராக போராடியவர் என்பதால் அவ்வூர் மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றிருந்தாலும், தன் உண்மை பெயரில் கதைகளை எழுதாமல், புனை பெயரான க. பாண்டியன் என, தன் ஒரு ஆண் ஆக தெரியும் படி கதை எழுதி வருகிறார்….இந்தி பிரச்சார சபை அமைப்பதை தடுத்து வரும் கயல்விழிதான் கா. பாண்டியன் என்பது தெரியாமல், அவரின் ரசிகரான  என்ஜினியர் தமிழ்செல்வன்(ரவீந்திர விஜய்) அவ்வப்போது அவரை புகழ்ந்து, கீர்த்தி யுடன் நெருக்கம் கொள்கிறார்… இந்நிலையில் தான் தாத்தா(எம்.எஸ். பாஸ்கர்) புற்றுநோயால் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து, நெடு நாளாக திருமணத்திற்கு ஒப்பு கொள்ளாத கீர்த்தி,
தன் எழுத்தை கொண்டாடும் தமிழ்செல்வனை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். திருமண நாள் நெருங்கும் நேரத்தில் கயல்விழிக்கு ஒரு உண்மை தெரிய, நடக்க விருக்கும் திருமணத்தை தடுக்க,   இந்தி திணிப்பை எதிர்க்கும் அவர் இந்தி கற்று தேர்வு எழுத முடிவு செய்கிறார். இந்தி தேர்வு எழுதினாரா? அவர் நினைத்தபடி திருமணத்தை நிறு த்தினாரா? தாத்தாவின் திருமண கணவு என்ன ஆனது என்பதே மீதி கதை..

கீர்த்தி யின் நடிப்பு அபாரம் ..கல்யாணத்தை நிரு த்த அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிளிர்கிறார்…

ரவீந்திர விஜய்யின் நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும். அச்சு அசல் எழுபது கால கட்ட, ஆணாதிக்கம் கொண்டவராக உடல் மொழி கொண்டு அத்தனை ரசங்களையும் கொட்டி நடித்திருக்கிறார்…

எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி சிறப்பாக நடிக்க,  ரகு தாத்தாவுக்கு கை கொடுத்திருக்கிறது. ஷான் ரோல்டனின் இசை.

கயல்விழி இந்தி தேர்வு எழுத முடிவு செய்ததில் இருந்து கடைசி வரை  சிறு சிறு காமெடி மற்றும் சஸ்பென்ஸை கொண்டு, க்ளைமேக்ஸ் காட்சியைஅழகாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் சுமன்.