
2015 ஆம் ஆண்டில் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் அருள் நிதி நடித்து வெளியான டிமான்டி காலனி படத்தின் இரண்டாவது பாகமாகஇன்று வெளியாகியுள்ளது டிமான்டி காலனி 2…
இப்படத்தில் அருள் நிதி, பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்..
முதல் படமான டிமான்டி காலனி யில் கதாநாயகன் ஸ்ரீனிவாசன் இறப்பதுபோல் காண்பிக்கப்பட்டு படத்தினை முடித்திருப்பார்கள்… ஆனால், ஸ்ரீனிவாசன் இறக்காமல், சாவின் மிக அருகில் சென்று தப்பி பிழைத்ததாக காண்பித்து இந்த பாகத்திற்கான கதையை சஸ்பென்ஸ் உடன் தொடங்கியிருக்கிறார்கள்..
டிமான்டி யின் முதல் பாகத்தில் வந்த செயினிற்கு என்ன ஆனது என்பதையே இரண்டாம் பாகமாக விவரித்துள்ளனர்.
பிரியா பவானி ஷங்கர், இந்த படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை கதையின் முக்கிய பாத்திரமாக இருக்கிறார். டிமாண்டி யின் ஒரு வீட்டிற்குள் சிலர் மாட்டி கொள்வார்கள் என்று நினைத்தால் ரூட்டை வேறு பக்கம் திருப்பி அழகாக கதை சொல்லியிருக்கார் இயக்குனர் அஜய் ஞானமுத்து..
இரண்டு அருள்நிதி இருந்தும் ஒருவர் கதாபாத்திரத்தில் இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம்… அருள்நிதி யின் நடிப்பு மிதமாக இருந்தது அழகு..
இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து, நடிக்கும் பொருட்டு, நடிக்க பிரியபாவானி கடுமையாக உழைத்துள்ளார்..
சாம்.சி.எஸ் இசையில், ஹாரர் திரில்லர் படமாக வந்திருக்கும், டிமான்டி காலனி 2 அனைத்து வகையான ரசிகர்களையும் நிச்சயம் ஈர்க்கும்.
.