ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் நாயகியாக மெரி ரிக்கெட்ஸ் மற்றும் ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்த, அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கி வெளி வந்திருக்கும் படம்
“போகுமிடம் வெகு தூரம் இல்லை”.

சென்னையில் இறந்தவரான நாராயண பாண்டியனின் உடல் ஐ, பிரிஸர் பாக்ஸ் இல் வைத்து எடுத்துச் செல்லும் வேன் டிரைவரான விமல், அவரின் இரண்டாவது மனைவியின் வாரிசான இசக்கி (பவன்)யிடம் ஒப்படைக்க திருநெல்வேலி செல்லுகிறார்…வழியில் லிஃப்ட் கேட்டு கூத்து கலை ஞ்சரான கருனாசும் அவ்வண்டியில் ஏற, வண்டி திருநெல்வேலி நோக்கி நகருகிறது… திருநெல்வேலிக்கு உடலை எடுத்துச் செல்லும் பயணம் தான் இந்த படத்தின் மையம். அந்தப் பயணத்தில் அவர் சந்திக்கும் மனிதர்கள், அவருக்கு ஏற்படும் அனுபவங்கள் மற்றும் தடங்கல்களை ஐ, தாண்டி சடலத்தை, திருநெல்வேலி யில் இருக்கும் இசக்கியிடம் ஒப்படைத்தாரா ?? என்பதே கதை

தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை லாவகமாக கையாண்டிருக்கிறார் விமல், அவரையும் தாண்டி நளின மூர்த்தி யாக வரும் கருணாஸ் நடிப்பில் அசத்தியிருக்கிறார்..ஒரு யதார்த்த கதையை இவ்வளவு சுவராஸ்யமாக தர இயலும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர்.

என். ஆர். ரகுநந்தனின் இசை பாராட்டத்தக்கது….
சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆக வந்திருக்கும் “போகுமிடம் வெகு தூரமில்லை” நெஞ்சை உருக்கும் பயணம்…