
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் டைரக்டர் PS வினோத் ராஜ் இயக்கத்தில்
சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ” கொட்டு காளி”
கிராமத்தில் பன்னிரண்டாவது வரை படித்த மீனா, (அன்னா பென்) விற்கு பேய் பிடித்திருப்பதாக, மாமன் மகன் பாண்டி (சூரி) மீனாவின் தாய் மற்றும் உறவினர்கள் அனைவரும் பேய் விரட்ட ஆட்டோ வில் பாலக்காடு செல்வதாக கதை தொடங்குகிறது…போகும் வழியில் குல தெய்வத்தை கும்பிட்டு சாமியாரிடம் செல்ல முனையும் தறுவாயில் தான் மீனாவை பிடித்தது காதல் ‘பேய்’ என்று தெரிய வருகிறது.. மீனாவை பிடித்த காதல் பேய்யை சாமியாரிடம் அழைத்து சென்று விரட்டினார்களா? இல்லையா ? என்பதே கதை..
103 நிமிடங்கள் வரை நீளமுள்ள இந்த படத்தில் நீ…..ண்ட மணி நேரம் ஆட்டோவிலும், பைக்கிலும் கிராமத்தின் வழியே செல்லும் சாலையின் மேடு பள்ளங்களையும், அவ் வூறின் மன் மணம் கலந்த பயண காட்சியினையும்..காட்சி படுத்தியிருக்கிறார் இயக்குனர்..
பிண்ணனி இசை சிறிதளவும் இல்லாமல் லைவ் சவுண்ட் எபெக்ட்டில் படத்தினை கொடுத்திருப்பது, ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தை கொடுத்துள்ளது… இருக்கிறது. மேலும் மற்ற ஓசைகளை துல்லியமாக பதிவு செய்த ஒலி வடிவமைப்பாளர்கள் சூரன் மற்றும் அழகிய கூத்தனை எத்தனை பாராட்டினாலும் தகும்…
தனது ஆக சிறந்த படைப்பினில் வறட்டு ஜாதி கெளரவத்தையும், அடிமை பெண்ணியத்தையும்… பயணத்தின் வழியே சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குனர் வினோத் ராஜ்.