தமிழ் சினிமாவின் முன்னணி வசூல் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தமிழகம், கேரளம் என இரண்டு மாநிலங்களிலும் தனக்கான ரசிகர் கூட்டங்களை பெருமளவில் வைத்திருக்கிறார் விஜய்..
இரண்டு மாநிலங்களிலும் அவருடைய படங்கள் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வசூலைப் பெற்று வருகிறது.

சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை, எல்லா தர மக்களையும் ரசிகர்களாக கொண்டுள்ள விஜய், தமிழகத்தில் எந்த ஒரு பொது இடத்திற்கும் போக முடியாத சூழல் உள்ள நிலையில், அதாவது அவரது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொள்வதால் அவர் அதிகம் வெளியில் வருவதில்லை.

இந்நிலையில் ஐதராபாத்தில் ரசிகர்களுடன் தியேட்டரில் அமர்ந்து அவர் ‘சலார்’ படம் பார்த்துள்ளார்.. என்ற தகவல் தற்போதுவெளியாகி உள்ளது.

‘தி கோட்’ படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் இருந்த போது கடந்த வருடம் டிசம்பர் மாதம் ‘சலார்’ படம் வெளியானது. அந்தப் படத்தை ஐதராபாத்தில் உள்ள ஒரு ‘மாஸ்’ தியேட்டரில் சாதாரண டிக்கெட்டில் விஜய் படம் பார்த்தார் என்ற தகவலை நடிகர் வைபவ் இப்போது வெளியிட்டுள்ளார். அப்படி படம் பார்த்தால்தான் ‘வைப்’ ஆக இருக்கும் என விஜய் சொன்னதாகவும் தெரிவித்திருந்தார். அவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது

இது பற்றி விஜய் படம் பார்த்த சிறு வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு ரசிகர் ஒருவர்,

எர்ரகட்டா, கோகுல் 70எம்எம் தியேட்டரில் விஜய் சார் ‘சலார்’ படத்தைப் பார்த்தார் என்று சுற்றி வரும் செய்தி உண்மையானதுதான். அவரது தனிப்பட்ட உரிமைக்காக நாங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டோம். அதை மதித்து நாங்களும் அமைதியாக இருந்தோம். அவர் படம் முடிந்து சென்ற போது எங்களைப் பார்த்து கையசைத்தார். அதுவே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது,” என்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.