வெற்றி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஆலன்”விவேக் பிரசன்னா, அருவி மதன், டிட்டோ வில்சன், ஸ்ரீ தேவா, ஹரிஷ் பெராடி ஆகியோர் நடிக்க….கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிரார் அறிமுக இயக்குநர் சிவா.ஆர்.

இசை – மனோஜ்  கிருஷ்னா… 

சிறு வயதிலேயே தனித்து காசிக்கு ரயிலேரி, வரும் நாயகன் வெற்றி, அங்கிருக்கும் மடத்தில் சேர்ந்து ஆன்மீகத்தில் மூழ்க, அவரது மனமோ, அதில் ஒன்றாமல் …விபத்து ஒன்றால் பாதிக்கப்பட்ட காட்சி நினைவில் வர, மனப் போராட்டத்தில் இருந்து மீளாமல் தவிக்கிறான். எழுத்தாளர் ஆக வேண்டும் என்று விரும்பும் அவரது மனது கடந்த 10 வருடங்களாக முயற்சித்தும் ஆன்மீகத்தை ஆட்கொள்ள மறுத்ததால், தான் நேசிக்கும் எழுத்துலகை நோக்கிய தனது பயணத்தை தொடங்குகிறார். அப்போது  அவருக்கு கிடைக்கும் ஒரு பெண்னின் நட்பானது, அவரது வாழ்க்கையில் மறுமலர்ச்சியை, கொடுக்கிறது… அதன் மூலம் துறவியாக சுற்றி திரிந்தவர் சக மனிதராக மாறி, தன் மனம் விரும்பும் எழுத்துலகில் இணைய முற்படும் போது, மீண்டும் ஒரு கசப்பான சம்பவத்தை எதிர்கொள்கிறார். அதன் மூலம் மீண்டும் திசை மாறும் வெற்றியின் வாழ்க்கை என்னவானது?, அவர் விரும்பிய எழுத்துலகில் அவர் சாதித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அமைதியாக ஆரவாரம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வெற்றி… துறவி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் அவரது அழுத்தமான முகம், மற்றும், அளவான பேச்சு என சென்று கொண்டிருந்த அவர், ஆன்மீக வேடத்தை களைந்துவிட்டு காதல் வயப்படும் போது, வெட்கமும் சிரிப்பும் காட்ட, அழகாக நடித்திருக்கிறார்…

ஜனனி தோமஸ் (மதுரா) அழகான முகம், சிறந்த தேர்ச்சி பெற்ற நடிப்பு…

மற்றொரு கதாநாயகி அனு சித்தாரா, கண்களால் காதல் பேசுகிறார்…

அலன், முற்றும் துறக்க நினைக்கும், சக மனிதனுக்கான படம்…