
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவ கார்த்திகேயன் , சாய் பல்லவி நடித்து உருவாகியுள்ள திரைப்படம் அமரன்.
இசை – ஜி. வி. பிரகாஷ் குமார்.
மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும் அவர் மனைவி இந்துவாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
முகுந்தின் மனைவியாக நடித்திருக்கும் சாய் பல்லவியின் பார்வையில் தொடங்குகிறது அமரன் படத்தின் கதை.
மெட்ராஸ் கிறித்தவ கல்லூரியில் இந்துவின் சீனியராக வருகிறார் முகுந்த். பாண்டிச்சேரியில் நடக்கும் ரேம்ப் வாக் போட்டியில் ஆரம்பித்த காதல் மெல்ல மெல்ல வளர்ந்து, கல்யாணத்தை நோக்கி செல்ல, ராணுவத்தில் வேலை பார்ப்பவருக்கு தனது பெண்ணை கல்யாணம் செய்துதர மறுக்கிறார் இந்துவின் அப்பா. இராணுவத்தில் இருந்து நேரே இந்துவின் வீட்டிற்கு முகுந்த் வந்து நிற்க, அவரது சீருடை மரியாதையை ஏற்று, தன் மகளை முகுந்த் கு திருமணம் செய்து வைக்கிறார்கள்..அதற்கு பின் ராணுவம் சென்ற அவருக்கு என்ன நேர்ந்தது என்பது பின் பாதி கதை…
ஒரு நிஜக்கதையை இயக்குநர் தைரியமாக எடுத்ததற்கு காரணம் என்றால் அது முகுந்த் மற்றும் இந்து வின் இடையிலான காதல் தான். மேஜர் முகுந்த் நாட்டுக்கும் வீட்டிற்கும் எத்தனை பொறுப்பாக இருந்திருக்கிறார் என்பதை அழகு பட சொல்லியிருக்கிரார் இயக்குனர்.
கேலி, கிண்டல், நையாண்டி என தன் அத்தனை ஃபார்முலா க்களையும் தூக்கி தூர போட்டு விட்டு, ராணுவத்தை விரும்பி ஏற்று நாட்டுக்காக வீர மரணம் அடைந்த முகுந்த் ஆகவே வாழ்ந்திருக்கிறார் சிவ கார்த்திகேயன்…
இன்னும் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது.. சாய் பல்லவி யின் “முகுந்தே”. ஒரு பக்கம் போர் சத்தம் காதுகளில் ஒலிக்க, மறுபக்கம் அவர் அழும் காட்சி , நடிப்பு ராட்சஸி…
மேஜர் முகுந்த் வரதஜானனின் வீரமரணத்தைத் தொடர்ந்து இந்திய அரசு அவருக்கு அசோக சக்கரா விருது அறிவித்தது.
ஜி.வி பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் நம் மனதை உருக்கி, நெஞ்சை பிசைந்து வெளியே அனுப்புகிறது ” அமரன்”..