யாக்கை பிலிம்ஸ் – கார்த்திக் தயாரிப்பில்
ஜெயவேல் முருகன் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம் “வருணன்”

இந்த படத்தில் ராதாரவி, சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரில்லா, பிரியதர்ஷன், ஹரிபிரியா, சங்கர்நாக் விஜயன், ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கெளசிக், மற்றும் பலர் நடித்துள்ளனர்

இசை போபோ சசி.

நீரின்றி அமையாது உலகு..தண்ணீர் இன் மகத்துவத்தை பற்றி சொல்லியிருக்கிறது படம்..

சென்னை, ராயபுரம் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் இரண்டு தரப்பினருக்கும் இடையே தொழில் ரீதியான போட்டி ஏற்படுகிறது. நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராதா ரவி மற்றும் சரன்ராஜ் இவர்கள் இருவரும் மோதல் இல்லாமல் தொழில் செய்து வந்தாலும், அவர்களிடம் வேலை செய்யும் தில்லை தில்லை(துஷ்யந்த்)க்கும், சங்கர் நாக் கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது..இது ஒரு பக்கம் இருக்க, சுண்ட கஞ்சி காய்சுவதாக தகவல் வந்து அதை தேட போன, காவல்துறை அதிகாரி க்கு தண்ணீர் கேன் நிறுவனத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்க ஆசை வர, ஏற்கனவே வாட்டர் கேன் தொழில் போட்டி காரணமாக இரு தரப்பினரிடம் இருந்த பகை, மற்ற போட்டியாளனை கொலை செய்யும் அளவிற்கு பகை, உருவெடுக்க அதனால் அவர்களது வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை சொல்வதே ‘வருணன்’.

தண்ணீர் கேன் நிறுவனம் நடத்துபவர்களாக நடித்திருக்கும் ராதாரவி அசால்டான நடிப்பு… சரண்ராஜ் க்கு பக்குவமான நடிப்பினை கொடுத்திருக்கிறார்…

நாயகனாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் கேப்ரில்லா கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

மற்றொரு நாயகனாக
நடித்திருக்கும் பிரியதர்ஷன் மற்றும் ஹரிபிரியா ஜோடி காதல், திருமணம், என்று செல்ல, குறையில்லமல் நடித்திருக்கிறார்கள்… சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்திருக்க வேண்டிய நடிகை, ஹரிப்ரியா… . 

வில்லனாக நடித்திருக்கும் சங்கர்நாக் விஜயனின் மனரிசத்தால் கவனிக்கும்படி ஈர்க்கிறார். ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கெளசிக், என அனைவரும் கிடைக்கும் இடத்தில் ஸ்கார் செய்திருக்கிறார்கள்..

காதல்,பகை, துரோகம்,தொழில் போட்டி என் அத்தனையும் குடுத்து ஒரு
நல்ல கதையை தேர்ந்தெடுத்து, விடாமுயற்சியடன் வெற்றி பெற்ற ஜெயவேல் முருகன் ஐ பாராட்டியே தீர வேண்டும்…