கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர்,பிரகாஷ்ராஜ், ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெட்ரோ..

முதல் காட்சியிலேயே தன் அப்பாவை இழந்த, சூர்யா வை, ஜோஜு ஜார்ஜ் தம்பதியினர் எடுத்து வளர்க்கவே, வளர்ப்பு மகனாகிறார்…மனைவியின் விருப்பத்திற்கு மகனாக ஏற்று கொண்டாலும், விருப்பமில்லாமல் வளர்க்கிறார் ஜோஜு ஜார்ஜ்..

வளர்ப்பு தாயும் இறக்க நேரிடவே, சூர்யா ஜோஜு வை அப்பாவாக பார்த்தாலும், அவரோ ஒரு அடியாளாக தான் பார்க்கிறார். அவரை வைத்து பல நாச வேலைகளை பார்க்கிறார். ஒரு கட்டத்தில், சூர்யாவுக்கு பூஜா மீது காதல் வர, அடிதடி எல்லாத்தையும் விட்டு, திருமண வாழ்க்கையில் நுழைய முயல்கிறார்.
அப்பா தனக்கு கொடுத்த கடைசி வேலை ஒன்றை சூர்யா செய்யாமல் மறைத்து வைக்கவே இருவருக்கும் தகராறு நடக்கிறது.m..இதனால் கோபமான ஜோஜு ஜார்ஜ், பூஜாவை கொன்றால் தான் நீ அதை சொல்வாய் என கொல்ல வர, ஜோஜு ஜார்ஜ் கையை சூர்யா வெட்டு விட்டு சிறைக்கு செல்ல,
பூஜா கோபத்துடன் அந்தமான் செல்ல நேரிடுகிறது… பல யுத்தங்களுக்கு நடுவில் மீண்டும் இவர்கள் இருவரும் இனைந்தார்களா என்பதே மீதிக்கதை….. 

படத்தின் முழு கணத்தையும் சூர்யா தாங்குகிறார்…சிரிக்கவே சிரிக்காத சூர்யா இடைவேளையில் சிரிக்கும் போது…அடடா…
சூர்யா பூஜா வின் காதல் காட்சிகள் அருமை..
சிரிப்பு டாக்டராக வரும் ஜெயராம் ஸ்கோர் செய்ய, பிரகாஷ் ராஜ், நாசர், கருணாகரன் கொடுத்த வேலையை செய்திருக்கின்றனர்..

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை சிறப்பு..

சூர்யா விற்கு கம் பேக் படமாக ரேட்ரோ அமைந்தது சிறப்போ சிறப்பு…