கெளதம் கிருஷ்ணா இயக்கத்தில் சாய் தன்ஷிகா நடித்து விரைவில் வெளி வர இருக்கும் படம் “யோகி டா”.. நேற்று படத்தின் டிரைலர் மற்றும் இசைத்தட்டு வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது..

இவ்விழாவினில் சிறப்பு விருந்தினராக ராதாரவி விஷால், மித்ரன் ஜவகர், மீரா கதிரவன், ஆர் வி உதயகுமார், பேரரசு மற்றும் பல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவின் மேடையில்
நடிகர் விஷால் மற்றும் நடிகை தன்ஷிகா இருவரும் காதலித்து வரும் விஷயத்தை நேற்று வெளிப்படையாக அறிவித்திருந்தனர். இவர்களுடைய திருமணம் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற இருக்கிறது என்றும்,
அதுபோல தன்ஷிகா பற்றி விஷால் பேசும்போது சாய் தன்ஷிகாவை சந்தோஷமாக வைத்துக்கொள்வேன். அவர் இப்போது எப்படி சிரித்துக் கொண்டிருக்கிறாரோ அவருடைய முகத்தில் இருக்கும் அந்த சிரிப்பு எப்போதும் இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். திருமணத்திற்கு பிறகும் சாய் தன்ஷிகா சினிமாவில் நடிப்பார் என்று கூறினார்…