அனுராஜ் மனோகர் இயக்கி டொவினோ தாமஸ், சூரஜ் வெஞ்சரமூடு, சேரன் நடித்து வெளிவந்திருக்கும் படம் நரி வேட்டை

ஆலப்புழாவில் தன் அம்மாவுடன் வசித்து வரும் டொவினோ தாமஸ் அரசாங்க வேலை அதுவும் நல்ல வேலையாக கிடைத்தால் தான் வேலைக்குச் செல்லுவேன் என்று மன உறுதியுடன் இருக்கும் டொவினோ அதே ஊரில் இருக்கும் ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். அப்பென்னை திருமணம் முடிக்க நெருக்கடி ஏற்பட்டதாலும் குடும்ப வறுமையின் காரணமாகவும் வேண்டா வெறுப்பாக தனக்கு பிடிக்காத கான்ஸ்டபிள் வேலையில் சேர்கிறார்.. அங்கே அவருக்கு அறிமுகமாகிறார் மற்றொரு போலீஸ் அதிகாரியான சூரஜ் வெஞ்சரமூடு.. அன்பாக பழகும் அவரோடு இணைந்து போலீஸ் பணிக்கு ஏற்ப தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்கிறார் டொவினோ தாமஸ்…..இந்நிலையில் வயநாடு பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மலைப்பகுதியில் இருந்து இறங்க மறுத்து போராட்டம் நடத்துகின்றனர். இறங்க மறுக்கும் அவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் பணி போராட்டம் நடக்கவே அங்கு பதற்றமான சூழல் உருவாகிறது…. இதனை அடக்க சேரன் தலைமையில் ஆன சூரஜ் வஞ்சரமூடு, டோவினோ தாமஸ் மற்றும் பலர்களோடு ஒரு குழு இப் போராட்டத்தினை ஒடுக்க மலைப்பகுதிக்கு செல்கிறார்கள்… அங்கே பழங்குடி மக்களுக்கும் சேரன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகளுக்கும் சில மோதல்கள் உருவாக அதற்குப்பின் அங்கு என்ன நடக்கிறது? என்பதே நரி வேட்டை….

ஆரம்பத்தில் காதல் நாயகனாக ஊரை சுற்றி வ லம் வரும் டொவினோ தாமஸ், காவல் அதிகாரியாக ஆன பிறகு பழங்குடி இன மக்களைப் பார்த்து கோபப்பட்டும் பின் அவர்களின் நிலையை பார்த்து தன் ஆற்றாமையை வெளிப்படுத்தும் இடத்திலும் சரி, பிற்பாடு வெகுண்டு எழும் இடத்திலும் சரி, தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அப்பாவி காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார் சூரஜ் வெஞ்சரமூடு..

கண்டிப்பான அதிகாரியாக மிடுக்குடன் அதே சமயம் முகத்தில் வஞ்சகமே தெரியாத ஒரு புன்னகையுடன் அசால்ட் ஆக நடித்திருக்கிறார் சேரன்..

ஒளிப்பதிவாளர் விஜய்.படத்தொகுப்பாளர் ஷமீர் முகமது, தங்களது பங்கிற்கு குறை இல்லாத பணியினை செய்திருக்கின்றனர்.

அபின் ஜோசப் கதைக்கு, உயிர் கொடுத்திருக்கிறார் அனுராஜ் மனோகர். நரி வேட்டை, நல்ல வசூல் வேட்டை..