
ஆறுமுக குமார் தயாரித்து இயக்க, விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், பப்லு,கேஜிஎப் அவினாஷ், திவ்யா பிள்ளை ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்
“ஏஸ்”..
படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே தனது பழைய அடையாளத்தை மறைத்து மலேசியா செல்கிறார் விஜய் சேதுபதி, அங்கு வரவேற்க இருக்கும் யோகி பாபுவிற்கு போல்ட் கண்ணனாக அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி.. தனது தோழி ஆன கல்பனாவை அறிமுகப்படுத்தி அவரது சிரிய ஹோட்டலில் வேலை வாங்கித் தருகிறார் விஜய் சேதுபதிக்கு.. ஒரு திருட்டு சம்பவத்தின் மூலம் கதாநாயகி ருக்மணியின் அறிமுகம் கிடைக்க முதலில் மோதல் ஏற்பட்டு பின் அதுவே காதல் ஆகிறது.. தன் காதலியை அவரது ஸ்டெப் பாதர் இடம் இருந்து மீட்டெடுக்க பல லட்சங்கள் தேவைப்படும் நிலையில் வில்லன் அவிநாஷின் கிளப்பின் சூதாட்டம் ஆடுகிறார்…. ஆட்டத்தின் ஆரம்பத்தில் சில இடங்களில் அவர் ஜெயித்தாலும் இறுதிக் கட்டத்தில் அவர் தோற்க நேரிடுகிறது… தோற்ற பண த்தினை கெடு காலத்திற்குள் கட்டிவிட வேண்டும் என்று விடுவிக்கப்படுகிறார் விஜய் சேதுபதி… இதற்கு மிகப்பெரிய அளவில் பணம் தேவைப்படுவதால் கொள்ளையடிக்க முடிவு செய்கிறார் விஜய் சேதுபதி.. அதனால் திட்டமிட்டு வங்கிக்குச் செல்லும் van னில் இருந்து 40 கோடி பணத்தை கொள்ளையடிக்கிறார் விஜய் சேதுபதி அதற்குப் பின் என்ன நடக்கிறது ? போலீஸ் அவரை கண்டுபிடித்தார்களா? கொள்ளையடித்த பணம் இவர்களுக்கு பயன்பட்டதா? என்பதை மீதி கதை..
கதாநாயகன் விஜய் சேதுபதி தனக்கு கொடுத்த பாத்திரத்தை அழகாக உள்வாங்கி செய்திருக்கிறார்.
நாயகி ருக்மணி வெசந்த் அழகாகவும் தனது சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
கல்பனாவாக வரும் திவ்யா பிள்ளை இவர்களுக்கு இணையாக நடிப்பில் ஈடு கொடுத்து நடித்துள்ளார்.
யோகி பாபுவின் நடிப்பு சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது..
சாம்.சி.எஸ் ன் பின்னணி இசை ஃப்ரீ கிளைமாக்ஸ் காட்சிகளில் மிரட்டலாக தெரிய, ஒளிப்பதிவாளர் கரனின் ஒளிப்பதிவு கை கொடுத்துள்ளது..
படத்தின் முதல் பாதியில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும் இரண்டாம் பாதி வேகமேடுக்க அதன் பின்னணி இசையும் காட்சிகளும் ஒரு சேர இனைந்து கைகொடுத்துள்ளது….. ஏஸ் மொத்தத்தில் பாஸ்…