பாபி பாலச்சந்திரன் தனது BTG யுனிவர்சல் பேனரின் கீழ் தயாரித்து,
விக்ரம் ராஜேஸ்வர் அருன் கேசவ் இருவரும் இணைந்து இயக்கி இருக்கும் படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்…

இப்படத்தில் வைபவ் அதுல்யா ரவி, லிவிங்ஸ்டன் ஆனந்தராஜ், மொட்டை ரஜேந்திரன், ஜான் விஜய், சுனில் ரெட்டி, கிங்ஸ்லி ஆகியோர் இணைந்து நடித்திருக்கின்றனர்…

பீட்சா கடை நடத்தி வரும் லிவிங்ஸ்டனின் முன்னாள் முதலாளி ஹுசைனி, இன்ஷூரன்ஸ் பணத்தைப் பெற தவறான ரூட்டை தேடி லிவிங்ஸ்டனிடம் உதவி கேட்கிறார்.. அவரும் தனது கீழ் வேலை புரியும் வைபவ் விடம் சொல்ல, அவர்களும் அப்பனத்தை திருடி விடுகிறார்கள். திருடிய பணத்தோடு ஒயின்ஷாப் செல்ல அங்கு பணம் பறிபோகிறது. மீண்டும் அந்த பணத்தைப் பெற பேங்கை கொள்ளை அடிக்க திட்டமிடுகிறார்கள்.. அதற்கு துணையாக பழைய திருடர்களான மொட்டை ராஜேந்திரன், ஜான்விஜய், சுனில் ரெட்டி, ஆனந்தராஜ் ஆகியோரின் துணையோடு பேங்கை கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி சுரங்கம் அமைத்து கொள்ளை அடிக்க செல்கிறார்கள்.. நினைத்தது போல் பேங்கில் இருந்து பணத்தை கொள்ளை அடித்தார்களா? இல்லையா? மீண்டும் அப்பணம் கிடைத்ததா? என்பதே சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்..

படத்தின் முன் பாதையில் மொட்டை ராஜேந்திரன் மற்றும் ஆனந்தராஜ் அடிக்கும் லூட்டிகள் சிரிப்பலையை ஏற்படுத்துகின்றன..
வைபவ் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய, அவ்வப்போது வந்து செல்லும் அதுல்யாவின் காட்சிகள் குறைவானாலும் நிறைவு..

இப்படத்தின் ஹைலைட் காட்சி யே, சைரன் சத்தம் கேட்டதும் தனது உண்மையான நிலையை மறந்து போலீசாக மாறி அதகளப்படுத்தும் ஆனந்தராஜின் நடிப்பு..

இசை இமான்…

2கே கிட்ஸ் ரசிக்க வாய்ப்புள்ள படம் “சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்”..