
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், சாயாஜி ஷிண்டே மற்றும் பாக்கியராஜ் நடித்துள்ள வெளியாகி உள்ள திரைப்படம் குபேரா
இசை – தேவி ஸ்ரீ பிரசாத்
படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே, இந்தியாவில் எண்ணெய் வளம் இருப்பதை தனது ஆட்கள் மூலம் தெரிந்து கொண்ட தொழிலதிபர் நீரஜ், இவ் விஷயம் தெரிந்து கொண்ட ஆட்களை அங்கேயே கொன்றுவிட்டு, அரசியல்வாதி ஹரிஷ் பேரிடியுடன் கூட்டு சதி செய்து அவ்வளத்தினை தன் கைக்கு மாற்றி வர்த்தகம் செய்ய விரும்புகிறார்… அதற்காக சில அரசியல் தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய கோடிக்கணக்கான பணத்தினை சுனாமிகள் வைத்து கொடுக்க வேண்டியதாக உள்ளது.. இதற்காக அவர் ஏற்கனவே சிறையில் இருக்கும் சிபிஐ ஆபீஸரான தீபக் (நாகார்ஜுனாவை) தேர்ந்தெடுக்கிறார்.. தீபக்கும் சில பிச்சைக்காரர்களை பினாமியாக வைத்து அவர்கள் மூலம் பணம் கொடுக்க திட்டமிடுகிறார்… இதனால் நாகார்ஜுனாவும் நான்கு பிச்சைக்காரர்களை தேர்வு செய்கிறார் அதாவது திருப்பதியில் இருந்து தேவா (தனுஷ்) மற்றும் சில ஊர்களில் இருந்து குஷ்பூ திவ்யா மற்றும் ஒருவர் என நான்கு ஆட்களை தேர்ந்தெடுக்கிறார்… அவர்களின் நடை உடை பாவனை அனைத்தையும் மாற்றி அவர்களுக்கு சில கம்பெனிகளையும் உருவாக்கிக் கொடுத்து அவர்கள் மூலம் பண பரிவர்த்தனையை செய்கிறார். வேலை முடிந்தவுடன் அவர்களை வரிசையாக கொன்றுவிட தேவா மட்டும் தப்பித்து விடுகிறார்.. இவை எவற்றையும் அறியாத தேவா சமீரா( ராஷ்மிகா மந்தனா ) வை சந்திக்கிறார். வில்லன் கும்பல் மற்றும் நாகார்ஜுனா தேவாவை தேட ராஷ்மிகாவையும் சேர்த்து பின் தொடர தேவாவை கண்டுபிடித்து கோடிக்கணக்கான பணத்தை மீட்டார்களா இல்லையா? என்பதே கதை.
ஏற்கனவே பல படங்களில் தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ் இப்படத்திலும் சோடை போகவில்லை.. பல இடங்களில் அவரது நடிப்பு முத்தாய்ப்பாய் தெரிகிறது. குறிப்பாக யார் என்று தெரியாத ஒரு நபர் இறந்து கிடக்க அவரை நாய் வண்டியில் ஏற்றாதீர்கள் என்று கதறும் இடத்தில் அப்ளாஸ் வாங்குகிறார்… மேலும் இடைவேளை காட்சியில் நம்மையும் சேர்த்து பதப்பதைக்க வைக்கிறார்…
அடுத்து கிங் நாகார்ஜுனா, சந்தர்ப்ப சூழ்நிலை கைதியாக மாறி அதிலிருந்து விடுபட்டு வேறு வாழ்க்கைக்கு வர அங்கும் தன்னை அதிகார வர்க்கம் ஆக்கிரமிக்க,, தன் மனைவி சுனைனாவுக்காகவும் மகளுக்காகவும் அவ் வேலையை தொடர, இறுதியில் தர்மம் ஜெயித்து தனுசுக்காக அவர் பக்கம் நிற்க, அனைத்து சூழ்நிலைகளிலும் மாசாக நடித்து நடிப்பிலும் கிங் நாகார்ஜுனாவாக பயணித்துள்ளார்…
காதலனால் கைவிடப்பட்ட ராஷ்மிகாவை தனுஷ் காப்பாற்ற, பிற்பாடு தனுஷிற்கு சங்கடம் வரும் வேளையில் எல்லாம் ராஷ்மிகா முன் மயங்கி விழ, அவர்களுக்குள் ஏற்படும் எமோஷனல் கனெக்ட் ஐ அருமையாக எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர் சேகர் கம்முலா
தொழிலதிபராக வரும் வில்லன் ஜிம் சர்ப் நடிப்பில் அசத்தியிருக்கிறார்
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அத்தனையும் அருமை
குபேரா தனுசுக்கு மற்றும் ஒரு பிளாக்பஸ்டர் மூவி…