நெல்சன் வெங்கடேஷ் இயக்கத்தில்,அதர்வா முரளி, நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் DNA

காதல் தோல்வியால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான அதர்வா, குடித்துவிட்டு தினம் வீடு திரும்ப, அவரது அப்பா சேத்தன் மனம் குமுறுகிறார்.. அதர்வாவால் அவரது தம்பியின் திருமணம் தடைப்பட்டு நிற்கிறது..

இதனால் அவரை சரி செய்ய மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புகிறார்கள். அங்கு அவர் மனமாற்றம் அடைந்து வீடு திரும்ப, நிமிஷாவை பெண்பார்க்க அழைத்து செல்கின்றனர்..
நிமிஷாவிற்கும் சிரி தளவான மனநிலை சார்ந்த பிரச்சனை ஒன்று இருப்பதை அதர்வாவிடம் மறைத்து அவரது அப்பாவே திருமணத்தை முன் நின்று நடத்துகிறார்…
எனினும் நண்பர்கள் மூலம் இந்த விஷயம் தெரிய வர நிமிஷாவின் பரிதவிப்பைப் பார்த்து அதர்வா அவரையே திருமணம் செய்து கொள்கிறார்.  சந்தோஷமாக வாழ்க்கையை தொடங்கும் அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது. கையில் வாங்கிய நிமிஷா சொற்ப கனம் உச்சி முகர்ந்து மீண்டும் குழந்தையை மருத்துவரிடம் கொடுக்கிறார்… அந்தக் குழந்தையை இன்குபேட்டரில் வைக்க நர்சி இடம் கொடுக்கிறார்கள்… பிறகு குழந்தையை கொண்டு வந்து, அதர்வாவிடம் கொடுக்க அவர் நிமிஷாவின் கையில் கொடுக்க நிமிஷா வும் இது யார் குழந்தை?? என்று கேட்கிறார்.. ஏற்கனவே மனநிலை சரியாக இல்லாத நிமிஷா சொன்ன விஷயங்களை கேட்டு அவர் குடும்பத்தினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் அதர்வாவிற்கு சிறு சந்தேகம் ஏற்பட்டு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கிறார் அப்பொழுது தான் தெரிகிறது குழந்தை மாறிவிட்டது என்று.. தான் பெற்றெடுத்த குழந்தையை தேடி கண்டுபிடித்தாரா??இல்லையா?? என்பதே டிஎன்ஏ……

கொடுத்த கதாபாத்திரத்தில் நச்சென பொருந்துகிறார் அதர்வா… தன் பிள்ளையை பறி கொடுத்துவிட்டு பார்க்கும் குழந்தை எல்லாம் தன் பிள்ளையாக இருக்கும் என்று ஏங்கும் இடத்தில் அதர்வா சிறப்பாக நடித்துள்ளார்…

இவருக்கு வீடு கொடுத்து நடித்துள்ளார் நிமிஷ சச்சின் சொல்லப்போனால்.. குழந்தையை கையில் வாங்கிய அடுத்த ஐந்தாவது நிமிடமே அது தன் குழந்தை இல்லை என்று தெரிந்ததும், பரிதவித்து குழந்தையை குப்பை கிடங்கு வரை போய் தேடும் இடத்தில் நடிப்பில் அசத்தியுள்ளார் நிமிஷா சஜயன்….

சேத்தன், பாலாஜி சக்திவேல், விஜி, ரமேஷ் திலக் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

குழந்தையை கடத்தும் பாட்டி ஒரு சீனில் மிரட்டிவிட்டு செல்கிறார்.

சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கை, குழந்தை இல்லாதவர்களின் ஏக்கம் இன்று பல விஷயங்களை கையில் எடுத்து எமோஷனால் நம்மை கட்டி போட்டு விடுகிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேஷ்

ஜிப்ரானின் பின்னணி இசை சிறப்பு.

மொத்தத்தில் டி என் ஏ அதர்வா விற்கு ஒரு பிளாக்பஸ்டர் மூவி என்று சொல்லலாம்….