
அறிமுக இயக்குனர் சண்முகப்ரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ் ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் லவ் மேரேஜ். மேலும் இவர்களுடன் கஜராஜ் ரமேஷ் tillak அருள் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்
33 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகாத கஜராஜனின் மகன் ஆன விக்ரம் பிரபுவுக்கு உள்ளூரில் பெண் கிடைக்காததால் 500 கிலோ மீட்டர் தாண்டி உள்ள மற்றொரு ஊரில் பெண் பார்த்து நிச்சயம் செய்ய சொந்த பந்தங்களுடன் செல்கிறார் விக்ரம் பிரபு… பெண் பார்த்து பிடித்த உடன் அன்றே நிச்சயமும் செய்து தங்கள் சொந்த ஊருக்கு கிளம்புகின்றனர் விக்ரம் பிரபுவின் குடும்பத்தினர்.. அந்நேரம் பார்த்து ஊரடங்கு அமலுக்கு வரவே அங்கேயே தங்கி விடும் அதாவது பெண் வீட்டாரின் ஊரிலேயே தங்கிவிடும் சூழல் ஏற்படுகிறது… இந்த சூழ்நிலையில் தனக்கும் நிச்சயதார்த்த பெண்ணிற்கும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரும் என விக்ரம் பிரபு நினைக்க, ஊரடங்கு ஊரடங்கின் காரணமாக இன்னும் ஒரு வாரத்திற்குள் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து விடலாம் என்று இரு குடும்பத்தாரும் ஒரு முடிவு எடுக்க, விடியற்காலையில் நிச்சயத்த பெண் ஓடிப் போய் விடுகிறாள். அதைக் கேட்ட அதிர்ச்சியில் விக்ரம் பிரபு மயங்கி விட பின் என்ன நடக்கின்றது என்பதே படத்தின் மீதி கதை..
கொடுத்த கதாபாத்திரத்தை அழகாக உள்வாங்கி நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு.. காதல் காட்சிகளில் முந்தைய படத்தை விட இப்படத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
கதாநாயகியான சுஷ்மிதாபட் அதிகமாக பேசாத போதும் அழகாக அருமையாக நடித்திருந்தார்.. தங்கையாக வரும் மீனாட்சி தினேஷ் அழகுடன் துடிப்பாக நடித்திருந்தார்..
கேமியோ ரோலில் வந்த ரியோ ராஜம் சரி முக்கிய காட்சியில் வந்த சத்யராஜ் ம் சரி, கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்கள்..
ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர் சிறப்பான ஒளிப்பதிவை கொடுத்து படத்தை ரசிக்கும்படியாக வைக்க,இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை இப்படத்திற்கு மிகவும் பக்கபலமாக இருந்தது..
மொத்தத்தில் லவ் மேரேஜ் ரசிகர்கள் ரசிக்கும் படியான கலாட்டா கல்யாணம்..