
MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”.
வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்வில் பேசியவர்கள்
தயாரிப்பாளர் மகேஷ்:
எங்கள் படத்தை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. படம் இப்போது தான் ஆரம்பித்தது போல உள்ளது, முடிந்து இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. அமீர், சமுத்திரக்கனி சார் நிறைய ஆதரவு தந்தார்கள். ஒளிப்பதிவாளர் சூரஜ் பற்றி ஏன் அதிகம் பேசுகிறோம் என்று படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். ஆகாஷ் மற்றும் தேவ் நடிகர்களாக இல்லாமல் எனக்கு மிகவும் பக்கபலமாக இருக்கிறார்கள். எனக்குப் பலமாக இருந்து உதவிய அனைவருக்கும் நன்றி. சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் சார் நிறைய அறிவுரைகள் தந்தார். Generous Entertainment நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. செப்டம்பர் 12 அனைவரும் திரையரங்குகளில் படம் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி.ஒளிப்பதிவாளர் சூரஜ்:
நன்றி சொல்வதைத் தவிர ஏதும் தோன்றவில்லை. நானும் இயக்குநர் சாமும் கல்லூரி முதலே நண்பர்கள், இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி, நன்றாகச் செய்துள்ளேன் என நம்புகிறேன். படம் பாருங்கள், அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர்:
கடவுளுக்கு நன்றி. நல்ல மனிதர்களோடு சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. வளர்ந்து வரும் ஒரு இசையமைப்பாளருக்கு ஒரு படத்தில் ஆறு பாடல்கள் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம். என் சவுண்ட் இன்ஜினியர் கிபிக்கு நன்றி. என்னோடு வேலை செய்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். நன்றி.நடிகை தேவிகா:
நான் தமிழில் செய்யும் முதல் படம் யோலோ. இதற்கு முன் ஒரு சீரிஸ் செய்திருந்தேன். இப்பட வாய்ப்பு தந்த சாம் சாருக்கு நன்றி. சமுத்திரக்கனி சாரின் தெலுங்கு படத்தில் நடித்த போது, சாம் சார் பார்த்து இந்த வாய்ப்பை தந்தார். இப்படத்தில் என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. படம் மிக அருமையாக வந்துள்ளது. செப்டம்பர் 12 எல்லோரும் தியேட்டரில் படம் பாருங்கள். நன்றி.
தயாரிப்பாளர் K.V. துரை:
நாங்கள் Access Film Factory-யில் நிறைய புது திறமையாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்கள் குழுவிலிருந்து ஒரு திறமையாளரான தேவ்வை இப்படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. டிரெய்லர் அற்புதமாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்.
இயக்குநர் சதீஷ்:
படக்குழு அனைவருமே இளமைத் துள்ளலுடன் இருக்கிறார்கள். படம் பார்க்க மிக நன்றாக உள்ளது. சாம் மிகச்சிறப்பாக உழைத்துள்ளார். தேவ் எனக்குத் தம்பி மாதிரி. அவன் ஹீரோவாகியிருப்பது மகிழ்ச்சி. சிறப்பாக வர வேண்டும். வாழ்த்துகள்.
இயக்குநர் ARK சரவணன்:
டிரெய்லர் நன்றாக உள்ளது. அதில் ஒன்றை மறைத்து வைத்துள்ளனர், அது படத்தில் சர்ப்ரைஸ் ஆக இருக்கும். தேவுக்காக தான் வந்துள்ளேன். அவரிடம் தான் முதலில் மரகதநாணயம் கதை சொன்னேன். Access Film Factory-யில் அவர் நிறைய உழைத்துள்ளார். இப்போது ஹீரோவாகியிருப்பது மகிழ்ச்சி. இந்த நேரத்தில் டெல்லி சார் இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். தேவ் பெரிய ஹீரோவாக வர வாழ்த்துக்கள்.
நடிகர் தேவ்:
இந்த வாய்ப்பு வரக் காரணமாயிருந்த அரவிந்த் பிரதருக்கு நன்றி. அவர் தான் இப்படத்திற்கு ஆள் தேடுகிறார்கள் என என்னை அனுப்பினார். கதை கேட்டேன், ரொம்ப பிடித்தது. என்னைத் தேர்ந்தெடுப்பார்களா என சந்தேகம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் போன் செய்து, “புதுமுகம் தான் வேண்டும், நீங்கள் பொருத்தம்” என்று சொன்னார். மகிழ்ச்சி. தயாரிப்பாளர் மொத்த டீமுக்கும் சுதந்திரம் தந்தார். சாம் சார் பக்காவாக திட்டமிட்டு உழைத்தார். என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. என்னை இப்படிப் பார்க்க ஆசைப்பட்ட என் அப்பா, அம்மா, மாமா மூவரும் இல்லை. அவர்களின் ஆசிர்வாதத்தில்தான் இது நடந்துள்ளது. செப்டம்பர் 12 யோலோ திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி.