
இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் இயக்கி தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, நிழல்கல் ரவி, மதுசூதன்ராவ், பிரியதர்ஷினி ராஜ்குமார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் குற்றம் புதிது..
காவல்துறை துணை ஆய்வாளர் மதுசூதனன் ராவின் மகள் கனிமொழி இரவு பணி முடிந்து வீடு திரும்புகையில் காணாமல் போகிறாள்.. மறுநாள் காலையில் மகள் வீடு திரும்பாததை அறிந்து மகளைத் தேடுகிறார் மதுசூதணன் ராவ்.. இதற்கிடையில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதுள்ளதாக தகவல் வர அந்நேரம் தான் ஒரு பெண்ணை கொலை செய்து விட்டதாக நாயகன் தருண் விஜய் வந்து சரண் அடைகிறார்..
நாயகன் கொலை செய்தது சேஷ்விதா கனிமொழி யை யா? என்ற கோணத்தில் விசாரணை தொடங்க ஆரம்பிக்க அவர் உயிருடன் வருகிறார்… அப்போது நாயகன் கொலை செய்ததாக சொல்லப்படும் நபர் யார்? இக்கொலைக்கும் நாயகனுக்கும் என்ன தொடர்பு என்பதே ” குற்றம் புதிது”..
அறிமுக நாயகன் தருண் விஜய் ஆக்சன் நாயகனுக்கான அத்தனை தகுதிகளையும் பெற்றிருக்கிறார்.. தனது இன்னசென்ட் முகத்தை வைத்துக்கொண்டு கொலை செய்ததையே ஒரு குழந்தையை போல் ஒப்புக்கொள்ளும் இடத்தில்
நடிப்பில் மிரள வைக்கிறார்
சேஷ்விதா கனிமொழி கண்களால் கதை சொல்கிறார்…கொடுத்த கதாபாத்திரத்தை உள்வாங்கி அடுத்தது என்ன என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு நடித்திருக்கிறார்..
அம்மாவாக வரும் பிரியதர்ஷினி ராஜ்குமார் உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .
ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு, மற்றும் எஸ். கமலா கண்ணன் எடிட்டிங் படத்தின் வேகத்தை கூட்டுகிறது . கரண் பி. க்ருபா இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது..
ஒரு மர்மமான க்ரைம் திர ல்லர் கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர் நோவா ஆம்ஸ்ட்ராங்…