டோம்னிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நஸ்லான் நடித்து வெளிவந்திருக்கும் படம் லோகா சாப்டர் ஒன் சந்திரா

வெளி நாட்டில் மிகப்பெரிய சண்டையிலிருந்து தப்பித்து, பெங்களூர் வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன் அங்கு அவர் தன் அடையாளத்தை மறைத்து கொண்டு மக்களோடு மக்களாக வாழ்கிறார். எதிர் வீட்டில் நாயகன் நஸ்லான் தங்கி இருக்க… இவர்கள் இருவருக்கும் நட்பு ஆரம்பிக்கிறது… இந்நிலையில் ஒரு நாள் நஸ்லான், கல்யாணியை சந்தேகப்பட்டு அவர் பின்னால் போக, கல்யாணி யை ஒரு ஆர்கான் திருட்டு கும்பல் கடத்த முயற்சிக்கிறது… அவர்களை அடித்து பிரித்து மேய்கிறார்…கல்யாணி ஆடும் இந்த ருத்ரதாண்டவத்தை பார்த்து நஸ்லான் மிரண்டு மயக்கமாகி விழுகிறார்… அத்தனை பேரையும் பந்தாடும் கல்யாணி யார், எப்படி இவருக்கு இத்தனை பவர்?, என்பதை முன்கதை யின் மூலம் சொல்வதே மீதிக்கதை…

கல்யாணி அப்படியே அந்த சந்திரா கதாபாத்திரத்தில் அற்புதமாக பொருந்தி போகிறார்,… ஆரம்பத்தில் தன் சக்தி வெளியே தெரியகூடாது என அவர் பொறுத்து பொறுத்து சென்றாலும், ஒரு கட்டத்தில் அவர் தன் சக்தியை வெளிக்கொண்டு வரும் இடம் மாஸ் நடிகர்களுக்கு இணையான சண்டை காட்சிகள்…
கல்யாணிக்கு அடுத்ததாக சாண்டி மாஸ்டர்… இதுவரை இப்படி பார்த்திராத சண்டியை, முற்றிலும் வேறு விதமாக காட்டி இயக்கி உள்ளார இயக்குனர்.. வே ம்பியராக மாறி நடிக்கும் இடத்தில் வித்யாசம்…

கேமியோ வாக வரும் துல்கர் அடுத்து வரும் பாகங்களில் மிரட்டுவார் போல்..

நவீன கால சூப்பர் பவர் திரைப்படம்…