விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10.09.2025 அன்று சென்னையில் நடைபெற்றது. இப்படம் விஜய் ஆண்டனியின் 25வது படம். இப்படத்தை அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு இயக்கியிருக்கிறார். இசையை விஜய் ஆண்டனியே அமைத்திருக்கிறார். ஷெல்லி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதாநாயகி திருப்தி நடிகையாக அறிமுகமாகிறார். இந்த விழாவிற்கு விஜய் ஆண்டனியை இயக்குனர்கள் திரளாக வந்து தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்கள். மேலும், இவ்விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது

நடிகர் / தயாரிப்பாளர் / இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசுகையில்,

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக வருகை தனத அனைவருக்கும் நன்றி. இப்போது தான் 25 படங்கள் நடித்தது போல் இல்லை, நேற்று தான் “நான்” படத்தில் நடித்தது போல் உள்ளது. 
25 படங்கள் என்பது நான் நாயகனாக நடித்த படங்களை மட்டும் குறிப்பிடவில்லை, நான் சிறு கதாபாத்திரங்களில் நடித்த படங்களையும் சேர்த்து தான் 25 வது படம் என்று குறிப்பிட்டுள்ளோம். 
அருண் அவர்களின் இயக்கத்தில் நடிப்பேன் என்று தெரியாமலே எனக்கு பிடித்த படம் “அருவி” என்று சொல்லியிருக்கிறேன். ஆனால், நீங்கள் எனக்கு மெசேஜ் செய்யும் போது நான் நம்பவே இல்லை. அவர் கதை சொல்லும் பொது அவரை மலைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். முதல் பாதி சொல்லும் போது இப்படத்தின் பட்ஜெட் மிக அதிகம் என்று உணர்ந்தேன். நான் எப்போதும் மீடியம் பட்ஜெட் படங்களை தான் நடித்து வந்துள்ளேன். ஆனால் இப்படத்தின் இரண்டாம் பாதியை கேட்டவுடன் பிரமித்துவிட்டேன். ஏனென்றால், இரண்டாம் பாதி முழுக்க முழுக்க அரசியல் களத்தில் உள்ளது.
பெரிய பட்ஜெட், அரசியல் படம் என்று யோசனை வந்தாலும், இப்படத்தை நடித்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். 4 வருடம் எனக்காக காத்திருந்து ஒரு கதை அமைத்ததற்கு பிரபுவிற்கு நன்றி.
இப்படத்தை என் சில நண்பர்களுக்கு காட்டினேன், அவர்களிடம் இவர் மறைமுகமாக ஏதேனும் குறியீடு வைத்திருக்கிறாரா? என்று கேட்டேன். அவர்கள் அப்படி ஒன்றும் இல்லை, நேரடியாகவே சொல்லியிருக்கிறார் என்றார்கள். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன், எப்படி இருந்தாலும் இப்படம் ஒரு கலை வடிவத்தில் தானே உள்ளது என்றேன். அந்த அளவிற்கு அழுத்தமான ஒரு படத்தை இயக்கியுள்ளார் அருண் பிரபு. 
பிரபு மற்றும் ஷெல்லியின் காம்பினேஷன் இப்படத்தை வேறு ஒரு தளத்திற்கு உயர்த்தியுள்ளது. அவர்கள் இருவரும் இணைந்து பல படங்கள் பணியாற்ற வேண்டும் என்று கேடுகொள்கிறேன். 
நூறு சாமி படம் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகும். அப்படம் பிச்சைக்காரன் படத்தை விட பெரிய ஹிட்டாக இருக்கும் என்று நம்புகிறேன். 
மேலும் பல புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட் – ஆக இருந்த இந்த நிறுவனம் 2027 ஆம் ஆண்டு முதல் பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக மாற உள்ளது. 
அனைவரும் செப்டம்பர் 19 ஆம் தேதி சக்தித் திருமகன் படத்தை பார்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன், நன்றி என்றார்.

இயக்குனர் அருண் பிரபு பேசுகையில், 

இங்கு பேசிய அனைவரும் பெரிய வார்த்தைகள் கூறினார்கள், அவர்களுக்கு நன்றி. இப்படத்தை 19ம் தேதி திரையரங்கிற்கு வந்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
இது மக்கள் சார்ந்த ஒரு அரசியல் படம். நீங்கள் எந்த மாறியான எதிர்பார்ப்பில் வந்தாலும், இப்படம் உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன். 
விஜய் ஆண்டனி சார் நடித்த மற்ற படங்களை இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பு மாறுபட்டு இருக்கும்