ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி சார்பில், திருமால் லட்சுமணன், டி ஷியாமளா தயாரிக்க, சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கி
நட்டி, அருண் பாண்டியன்
நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ரைட்… இவர்களுடன் ‘பிக் பாஸ்’ அக்‌ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், ரோஷன் உதயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகை அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் நாயகனாக அறிமுகமாக, வீரம் படத்தின் குழந்தை நட்சத்திரமான யுவினா பார்கவி நாயகியாக நடித்திருக்கிறார்

தன்மகன் ஆதித்ய சிவக் காணாமல் போன நிலையில் தந்தையான அருண்பாண்டியன் அவனது தோழர்களிடம் விசாரித்து அவர்களுக்கும் தெரியாத நிலையில் காவல் நிலையம் சென்று புகார் அளிக்கிறார்… இன்ஸ்பெக்டர் நட்டி யோ பிரதமரின் பந்தோபஸ் காக சென்றுவிட அங்கே கான்ஸ்டபிள் ஆக இருக்கும் மூணாறு ரமேஷ் இடம் கம்பளைண்ட் ஒன்று எழுதிக் கொடுக்கிறார் இதற்கிடையில் ஏற்கனவே திருடன் (தங்கதுரை) ஒருவன் அங்கு இருக்க லாக்கப்பில் ஒரு கைதி மற்றும் பெண் போலீஸ் அதிகாரி என்று அங்கு சில பேர் குழுமி இருக்கிறார்கள்…

தனது திருமண பத்திரிக்கை கொடுக்க லீவில் இருந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் (அக்ஷரா ரெட்டி ) அங்கு வர,
 திருட்டு லேப் டாப்பை இயக்குவது பற்றி மூணார் ரமேஷ் கு கற்றுக் கொடுக்கிறார்..

ஆன் செய்யப்பட்டதும் தானாக இயங்கும் கம்பியூட்டர் ,வழியே வரும் ஒரு குரல், ஏட்டு  உட்கார்ந்து இருக்கும் இருக்கைக்கு கீழும் , ஸ்டேஷனை சுற்றியும் வெடிகுண்டு  இருக்கிறது என்றும் யார் வேண்டுமானலும் உள்ளே வரலாம். ஆனால் வந்தவர் வெளியே போக நினைத்தால் பாம் வெடிக்கும் என்று சொல்லி, இந்த ஸ்டேஷனில் இருக்கும் போலீஸ் ஒருவரால் ஒரு பெண் ஒருவருக்கு அநியாயம் நடந்திருக்கிறது அதற்கு நீதி வேண்டும் என்று அந்த குரல் சொல்ல, அதற்குப் பின் ஸ்டேஷனில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களே “ரைட் “..
 
இடைவேளை வரை நட்டி இரண்டே காட்சிகளில் வர, படத்தின் பிற்பாதியில் அதற்கான நியாயத்தை சேர்க்கின்றனர்

முக்கிய கதாபாத்திரத்தில் அருண் பாண்டியன், நடிக்க தன் மகன் காணவில்லை என்ற பரிதவிப்பையும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்..

பெண் சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் அக்‌ஷரா ரெட்டி, சூழ்நிலையை புரிந்துக்கொண்டு பிரச்சனையை ஆசால்ட்டாக சமாளித்து அசல் காவல்துறை அதிகாரி போல் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்

இவர்களுக்கெல்லாம் இணையான நடிப்பை கான்ஸ்டபிளாக வரும் மூணார் ரமேஷ் தன் கதாபாத்திரத்தை சர்வசாதாரணமாக கையாண்டிருக்கிறார்.

மொத்தத்தில் ரைட் திரைப்படம் இக்குழுவினருக்கு ஒரு சரியான ரிசல்ட் ஐ தரும்