செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் , ரானா டகுபதி ,
சமுத்திரகனி , பாக்யஶ்ரீ போர்ஸ் ஆகியோர் நடித்துள்ள படம் “காந்தா”.

பழம்பெரும் நடிகர் தியாகராஜா பாகவதரின் வாழ்க்கையை 1944 ஆம் கட்டங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளோடு கொஞ்சம் புனைந்து இப்படத்தின் திரைக்கதை யை கொடுத்திருக்கிறார்கள்..

நாயகனான டிகே மகாதேவன், இயக்குனர் சமுத்திரக்கனி சொல்வதை கேட்காமல், தனக்குத் தோன்றியதை நடித்துக் கொண்டிருக்க, இயக்குனர் சமுத்திரகனியோ, துல்கரின் முகம் பாராமல் படக்காட்சி யை இயக்கிக் கொண்டிருக்க, அவர்கள் இருவருக்குள் ஏதோ பரஸ்பரம் சரியில்லை என்பதை காண்பிக்கிறது படத்தின் முதல் காட்சி..

தான் அழைத்து வந்து வாய்ப்பு கொடுத்து, சினிமாவில் அவனை ஒரு பெரிய நடிகனாக்குகிறார் சமுத்திரகனி. புகழ் வளர வளர மகாதேவன் தனது குருவை மீறி, அவர் பேச்சுக்கு அடங்காமல் போகவே, சமுத்திரக்கனி க்கு ஈகோ எட்டி பார்க்கிறது..

துல்கருக்கு போட்டியாக அப்படத்தில் நடிக்க இருக்கும் கதாநாயகி ( பாக்கியஸ்ரீ போர்ஸ் ) குமாரி யை களம் இறக்குகிறார் சமுத்திரக்கனி…முதல் சூப்பர் ஸ்டார் என்று அனைவரின் கை தட்டலின் புகழ் மயக்கத்தில் இருக்கும் நாயகனுக்கும், அவனது குருவுக்கும் இடையில் ஏற்படும் மோதலே ” காந்தா “..

டி ஆர் மகாதேவன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக இடைவேளைக்கு முன் வரும் ஒரு காட்சியில் முன்று மனநிலைக்கான சூழ்நிலையை கொடுத்து அதற்கேற்றார் போல் நடி என்று சமுத்திரக்கனி சொல்ல, அப்போ படப்பிடிப்பு காட்சியில் அவர் நடிக்கும் நடிப்பு அரங்கம் அதிரும் நடிப்பு…அது போலவே கிளைமாக்ஸ் காட்சியும்…

செல்வமணி செல்வராஜ் அவர்களின் திரைக்கதை க்குஏற்ப அருமையாக ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்தோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது. டேனியின் ஒளிப்பதிவு, கலை இயக்குனர் ராமலிங்கத்தின் பங்கும் 1950ம் ஆண்டு மெட்ராஸ் எப்படி இருந்தது என்பதை அப்படியே கண்முன் கொண்டு வந்து காட்டியிருக்கிறார்கள்…