
கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் , ஜெகபதி பாபு, ஒய் ஜி மகேந்திரன், ஸ்ரீரஞ்சனி, மோகன் ராம், சுஹாசினி, அபிராமி வெங்கடாச்சலம், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், நடிப்பில் ஜியோ ஹாட்ஸ்டார் இல் வெளியாகியிருக்கும் படம் “ஆனந்தா”..
புட்டபர்த்தி சாய்பாபாவின் பெருமைகளை சொல்லும் வகையில் சுரேஷ் கிருஷ்ணா எழுதி இயக்க – தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி உள்ளது…
வட இந்தியத் தொழிலதிபர் ஜெகபதி பாபு, கேரள பாலக்காட்டு தம்பதி (ஒய் ஜி மகேந்திரன் – ஸ்ரீரஞ்சனி), காசி வாழ் பெண் சுஹாசினி , சென்னை வாழ் பரதநாட்டியக் கலைஞர் அபிராமி வெங்கடாசலம், அயல்நாட்டில் வாழும் வெள்ளைக்கார தம்பதிகளை
புட்டபர்த்தி சாய்பாபா கோவிலில் இருக்கும் நிழல்கள் ரவி இவர்கள் அனைவரையும் ஒருமுகப்படுத்தி கோவிலுக்கு வரவழைக்கிறார்
புட்டபர்த்தி சாய்பாபாவின் பக்தர்களான, இவர்களின் வாழ்க்கையில் நடந்த இன்னல்களையும் அதற்குப் பிறகு நடந்த அற்புதங்களையும் சாய்பாபாவின் மற்ற பக்த கோடிகளுக்கு எடுத்துரைக்கின்றனர்
காசி, புட்டபர்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகளை தத்ரூபமாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சஞ்சய். தேவாவின் பின்னணி இசை யில் சாய் சத்யா சாய் பாடல் தெய்வீக பாடல் ஆக உள்ளது…
முழுக்க முழுக்க பக்தி படமாக இல்லாமல் ஆங்காங்கே, குழந்தை உள்ளத்துடன் அப்பாவை தேடி, அடைக்கலம் அடைய துடிக்கும் பக்தர்களின் கதையைக் கொண்டு உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா..
பல்வேறு காலகட்டங்களில் பாபாவின் தோற்றத்தை யும் அவர் அருள் பாலிக்கும் விதத்தை பார்ப்பதும் கண் கொள்ளா காட்சி… ஆனந்தா சாய்பாபா பக்தர்களை இன்னும் மெய்சிலிர்க்க வைக்கும்… 3.5/4
