இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில்
மதும்கேஷ், ஜியா ஷங்கர், அர்ஜுன் அசோகன், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் நடிப்பில்
வெளிவந்துள்ள படம் காதல் ரீசெட் ரிப்பீட்.

இசை – ஹாரிஸ் ஜெயராஜ்

ஒரு தலை காதல் வழக்கம் போல், இறுதியில் ட்விஸ்ட்..

காதல் தோல்வியால் வாழ்க்கை வெறுத்து ஸ்காட்லாந்தின் மலைப்பகுதியில் இருந்து கீழே குதிக்கிறார் கதாநாயகி ஜியா.. தலையில் அடிபட்டு இரண்டு வருடம் நினைவுகளை இழக்க, தினமும் எழுந்திருக்கும் வேளை யில் தான் யார்? என்பதே தெரியாமல் நிற்கிறார் கதாநாயகி ஜியா..அவரைக் காப்பாற்றியாதோடு தனது கண் பார்வையில் வைத்துக்கொண்டு நான் தான் நீ காதலித்த காதலன் என்று கூறுகிறார்.. இவருக்கு ஒத்துழைக்கிறார் வீட்டின் உரிமையாளர் எம்.எஸ். பாஸ்கர்… பிறகு இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் கதையே மீதக்கதை..

படத்தின் நாயகியான ஜியா ஹீரோயினுக்கே உண்டான அனைத்து தகுதியுடன் வலம் வருகிறார். ஒரு சாயலில் தமன்னாவிற்கு தங்கையோ என்று தோன்றுகிறது. அதுபோல் நடிப்பும் அளவாகவே நடித்துள்ளார்..

ஹீரோ மதும்கேஷ், அளவான பேச்சு அளவான நடிப்பு என இயக்குனர் சொல்லிக் கொடுத்தார் போல் இயக்குனர் நடிகராக நடித்திருக்கிறார்..

அசோக் அர்ஜுனன் மலையாள சினிமாவில் ஹீரோவாக கலக்கிய இவருக்கு நெகட்டிவ் ரோலா என்று என்னும் வேளையில், இரண்டாம் பாதியில் மறதியில் இருக்கும் ஜியாவிடம் நான் தான் காதலன் என நிரூபிக்கும் இடம் செம கலகலப்பு, அதிலும் ஆங்கிலம் தெரியாத பவுன்ஸர்களுடன் சேர்ந்து அவர் செய்யும் கலாட்டா செம ஜாலி.

மொத்தத்தில் காதல் ரீசெட் ரிப்பீட்…கலங்க வைக்கும் களைமாக்ஸ்..