பரத், அஜய் கார்த்திக்,அபர்னதி, ஸ்ரீ பவானி, சங்கீதா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் காளிதாஸ் 2

500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் அப்பார்ட்மெண்டில் ஒன்றில் அபர்நதியின் குழந்தையான மித்ரா காணாமல் போகவே, குழந்தையை தேடும் விசாரணை போலீஸ் ஆக பரத் வருகிறார்.. ஏற்கனவே அதே அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஒருவனின் மேல் சந்தேகம் வர விசாரணை தொடர்கிறது… ஏற்கனவே கற்பழிப்பு வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்ட அவன் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது.. இவருடன் அசிஸ்டன்ட் கமிஷனராக ஸ்ரீ பவானி விசாரணையை தொடர்கிறார்… காணாமல் போன குழந்தை என்ன ஆனது என்பதே மீதி கதை..

போலீஸ் உடையில் மீண்டும் பரத்.. பொறுப்புடன் பதட்டம் இல்லாமல் நிதானமாக கையாளுகிறார். கதாபாத்திரத்திற்கு கன கச்சிதமாக பொருந்தியுள்ளார்..

புதுமுகம் அஜய் கார்த்திக், முதல் பாதி யில் கெட்டவனாக அரங்கேறி இரண்டாம் பாதியில் நல்லவனாக காட்டும் வழக்கமான கதை.. இருந்தும் கொடுத்த கதாபாத்திரத்தை நம்மளும் சிந்திக்கும் அளவுக்கு சிறப்பாக கையாண்டிருக்கிறார்…

ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் விஜயின் கதாநாயகி சங்கீதா, சொல்லாமலே என்ற வார்த்தைக்கு ஏற்ப, தனக்குள் இருக்கும் சங்கடத்தை சொல்ல முடியாமல் மென்று முழங்கி, இறுதியில் ஒரு முடிவெடுக்கும் குழப்பமான கதாபாத்திற்கு ஏற்ப பொருந்தியுள்ளார்…

விறுவிறுப்பான திரைக்கதை, சாம் சி.எஸ். (Sam CS) பின்னணி இசையில் ஸ்ரீ செந்திலின் இயக்கதில் காளிதாஸ் 2 பர பரப்பான திரில்லர்..