இயக்குனர் செல்வராகவன் நாயகனாக நடிக்க, குஷி ரவி நாயகியாக நடித்து வெளிவந்திருக்கும் படம் மனிதன் தெய்வமாகலாம்..

இயக்கம் – டென்னிஸ் மஞ்சுநாத்

இசை – பிரியன்

சேலத்துக்கு அருகே ஒரு மலை கிராமம் அந்த மலை கிராமத்தில் பதநீர் விற்று வாழ்க்கை நடத்தி வரும் நாயகனாக செல்வராகவன்.. அரசாங்க சாலை வசதி இல்லாத ஒற்றையடி பாதையே அவர்களின் ஊருக்கு செல்லும் வழி..

இவருக்கும் குஷி ரவிக்கும் திருமணம் நடக்கிறது.. இவர்களின் வீட்டு அருகாமையில் இருக்கும் கௌசல்யா மற்றும் அவரது கணவர் உதவியோடு மெயின் ரோடு பாதையில் ஒரு தாபா ஹோட்டல் நடத்துகின்றனர்.. அமைதியாக போய்க்கொண்டிருக்கும் இவர்கள் வாழ்க்கையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏவான ஓய்.ஜி மகேந்திரனின் மைத்துனர் மைம் கோபி உள்ளே வர அதற்குப் பிறகு இவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கின்றது என்பதே மீத கதை..

கதையின் நாயகனாக இயக்குனர் செல்வராகவன் களங்கமற்ற ஆனால் அதே சமயத்தில் அழுத்தமான முகம். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழியுடன் கூடிய நடிப்பு.
இவருக்கு இணையாக குஷி ரவி களையான முக அழகடன் நடிக்கவும் செய்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கௌசல்யா நடித்துள்ளார். அவரின் பங்கு குறைவாகவே இருந்தாலும் நிறைவாக செய்துள்ளார்

செல்வராகவனின் உறவினராக வரும் ஆர் எஸ் சதீஷ் மற்றும் கௌசல்யா, மைம் கோபி ஒய். ஜி மகேந்திரன் ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்துள்ளனர்..

பிரியனின் இசையில் பாடல்கள் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது

எல்லாக் கொலைகளின் பின்னணி யில் ஒரு நியாயம் இருக்கிறது என்று கதையினை சொல்லுகிறார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத்.. அந்தப் பின்னணியை பொறுத்து மனிதன் தெய்வம் ஆகிறான்..