வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஏ. சற்குணம் இயக்கத்தில், அப்பாஸ் அதிதி பாலன் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்து அமேசான் ப்ரைம் ஓடிடி யில் வெளிவந்திருக்கும் தொடர் “எக்ஸாம்”.

அரசு பணிக்கான குரூப் 1 குரூப் 2 தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை ஒரு திரில்லர் கதையாக நமக்கு சொல்லி இருக்கின்றனர்

தொடர் ஆரம்ப முதல் இறுதி வரை விறுவிறுப்பாக நகர்கின்றது துஷாரா விஜயின் சிறப்பாக நடித்திருக்கின்றார்.. தேர்வு முறைகேடு எப்படி நடக்கின்றது ஜான்சிக்கும் மரவல்லி க்கும் உள்ள உண்மையான தொடர்பு என்ன என்பது வெளிப்படும் போது தொடரின் வேகம் கூடுகிறது… காவல் அதிகாரியாக துஷாரா விஜயன் நடித்திருப்பது சிறப்பு.. அதிதி பாலனின் திரைநேரம் குறைவாக இருப்பினும் நேர்த்தியாக தன் கதாபாத்திரத்தை செய்துள்ளார்

இரண்டாவது சீசனுக்கு முன்னோட்டத்தை கொடுத்து, அடுத்த சீசன் காண ஆவலை ஏற்படுத்தி உள்ளனர்..

சாம் சி.எஸ் இசை யில் விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடர் தற்போது இணைய தளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.