
இயக்குனர் சசி இயக்கத்தில் சுவாசிகா, விஜய் ஆண்ட்டனி, கருணாஸ் அஜய் திஷான் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம் “நூறு சாமி”.
கள்ளக்குறிச்சியில் வசிக்கும் செல்வி (ஸ்வாசிகா) இளம் வயதிலேயே கணவனை இழந்து, தனது இரு குழந்தைகளையும் பொறுப்புடன் வளர்க்கும் ஏழை தாய். அம்மா, அண்ணன், சகோதரி இருந்தும் அவளுக்கு துணை நிற்காத சூழலில் பொருளாதார பிரச்னைகளை தனியே சமாளித்து தனது பிள்ளைகளை படிக்க வைக்கிறார். ஒரு கட்டத்தில், வளர்ந்த தன் பிள்ளைகளிடம் தனக்கு மறுமணம் தொடர்பாக உள்ள விருப்பத்தை தெரிவிக்க, ஆத்திரமடைந்த மூத்த மகன் பாஸ்கர் (அஜய் திஷான்). தாயிடம் பேசுவதை நிறுத்த.. தாயும் அந்த எண்ணத்தை கை விட்டு பின் தாயும் மகனும் ஒன்றாகின்றனர்.. சில வருடங்களுக்குப் பிறகு பக்குவப்பட்ட மூத்த மகன் அவருக்கு மறுமணம் செய்ய விரும்புகின்றான். அதற்கு செல்வி சம்மதம் தெரிவிக்காத நிலையில் அவருக்கு மறுமணம் நடத்தி வைக்கப்பட்டதா? இல்லையா?? என்பதே நூறு சாமி திரைப்படத்தின் கதை.
முழு கதையையும் தன் தோளில் சுமந்திருக்கிறார் சுவாசிகா… செல்வியாக வாழந்திருக்கிறார்..” கொலை பண்ணிருந்தால் கூட ஏழு வருஷம் தான் சிறை தண்டனை ஆனால் என் கணவன் இயற்கை மரணம் எய்த, எனக்கு வாழ்நாள் முழுவதும் தண்டனை ” என்று வரிசையாக வசனம் பேசும் இடத்தில் நடிப்பு அரசி ஆகிறார்.
கருணாஸ், பாலாஜி சக்திவேல் , லிஜுமோள், பகவதி பெருமாள், ஜென்சன், தாமரைச்செல்வி ஆகியோர் கதைக்கேற்ப சிறப்பாக நடித்துள்ளனர். இரண்டாம் பாதியில் செல்வியின் குடும்பம் ஒன்று சேர்ந்து, ஒரு காட்சியில் நடிக்க, பார்க்கும் நமக்கு பதை பதைப்பு..
இரண்டாம் பாதியில் சில காட்சிகளே வந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் விஜய் ஆண்டனி. வழக்கத்திற்கு மாறான நடிப்பை கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
பெண்கள் மறுமணம் செய்து கொள்ளலாம் என்ற சட்டம் இருந்தும், அதனை ஏற்காத சமூகம் இன்றளவும் உள்ளது… என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் சசி…
