
கட்டா குஸ்தி ஏற்கெனவே இந்த திரைப்படம் வெற்றி பெற்றதால்… அதன் பாகம் 2…வினை வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி, மோக்ஷா, சாரா, கருணா, காளி வெங்கட், முனீஸ் காந்த், கருணாகரன் என பலர் நடிப்பில் வெளியாகி இருக்கிறது கட்டா குஸ்தி 2 திரைப்படம்
நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால் தான் ஒரு முன்னணி நடிகர் என்ற எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் கதைநாயகனாக கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்
இதில் மல்யுத்த வீராங்கனையாக ஐஸ்வர்யா லக்ஷ்மி, அவரின் வீட்டுக் கணவராக விஷ்ணு விஷால், பள்ளி ஆசிரியராக மோக்ஷா நடித்துள்ளனர்.
மல்யுத்த வீராங்கனையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா அதற்கான உடல் மொழிகளில் கவனம் ஈர்க்கிறார்.
எமோஷன் கலந்த சுட்டி நடிப்பால் ரசிக்கச் வைக்கிறார் குழந்தையாக நடித்து இருக்கும் சிறுமி சாரா.
மீனு டீச்சராக வரும் மோக்ஷா தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பின் வரும் கவர்ச்சிகரமான ஆசிரியராக வரும் இவர் முந்தானை முடிச்சு தீபாவை நினைவு கூர் கிறார்
சான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
கட்டா குஸ்தி 2. ஜாலியாக கலகலப்பாக குடும்பங்கள் கண்டு களிக்க, குதூகலமான திரைப்படம்…
